Thursday, February 18, 2016

அதிமுக & திமுக மறதி உள்ள பொதுமக்களிடம் இதை கொண்டு சேர்ப்போம்...


1) இருவருமே மதுபான தயாரிப்பாளர்கள்!

2) இருவருமே கல்லூரி நடத்தி பணம் பாரப்பவர்கள்!

3) இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள்!

4) குடும்ப, நட்பு கூட்டத்திறகாக தமிழக நலனை விட்டு கொடுத்தவர்கள்!

5) அராஜக ஆட்சி செய்தவர்கள்!

6) ஊழல் செய்தவர்கள்!

7) நல்லவர்களை அரசியல், சமூக நல இயக்கங்களிலிருந்து ஓரம் கட்டியவர்கள்!

8) நில அபகரிப்பு செய்தவர்கள்!

9) பொதுமக்களை அச்சுறுத்தி அரசியல் செய்தவர்கள்!

10) கட்சி தலைமையே தமிழகம் என்று அவர்கள் துதிபாடி அடிமை அரசியல் செய்பவர்கள்!

11) தமிழக வாழ்வாதார பிரச்சனைகள் எல்லாவற்றிலும், அரசியல் ஆதாயம் இல்லையென்றால் அமைதி காப்பவர்கள்!

12) ஓட்டுக்கு காசு என்ற கேவல அரசியலை கொண்டு வந்தவர்கள்!

13) இலவசங்கள் என்ற பெயரில் தமிழகத்தை பின்னோக்கி அழைத்து சென்றவர்கள்!

14) சென்னை, கடலூர், சிதம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் வெள்ளத்திறகு முழு காரணமான உட்கட்டமைப்பு இல்லாமைக்கு முழு பொறுப்பாளர்கள்!

15) விவசாயம் முன்னேற ஏதும் செய்யாமல் நடுவில் உள்ள இடை தரகர்கள் லாபம் அடையும் வண்ணம் அரசியல் செய்தவர்கள்!

16) ஒவ்வொரு ஆண்டும் தமிழக பங்கு மத்திய பங்கில் இருந்து குறைந்தாலும் அதைப்பற்றி பேசாமல் அமைதி காத்தவர்கள்!

17) இவருக்கு கும்பகோணம் மகாமகம், வளர்ப்பு மகன் திருமணம் என்றால்,
அவருக்கு எண்ணிலடங்கா பாராட்டு விழாக்கள், தனக்கு தானே சூட்டிய பட்டங்கள், செந்தமிழ் மாநாட்டையும் தன் குடும்ப மாநாடாக ஆக்கிய அவலங்கள்!

18) இருவருமே அரசு கல்லூரி, கல்வி நிலையங்களை அழித்தவர்கள்!

19) மக்களுக்கான அரசியல் செய்யாமல் மக்களை கேடயமாக வைத்து அரசியல் செய்பவர்கள்!

20) இவருக்கு 'விழுப்புரம் பஸ் எரித்து 3மாணவிகள் பலி'! என்றால், அவருக்கு 'மதுரை தினகரன் பத்திரிகை ஆபிஸ் எரித்து 3ஊழியர்கள் பலி'!

21) இவருக்கு சொத்து குவிப்பு வழக்கு என்றால், அவருக்கு 2G, பிஸ்என்எல் என கணக்கில் அடங்கா ஊழல்!

22) மின் உற்பத்தியில் ஊழல், அரசு போஸ்டிங்கில் ஊழல்,
அனைத்து அரசு துறைகளில் ஊழல்,
துணை வேந்தர் போன்ற மரியாதைக்குரிய பதவிகளில் ஊழல் என ஊழலை நம் வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கியவர்கள்!

23) தொழிற்சாலைகளை காசு கறக்கும் பண நிலையங்களாக மாற்றி, இன்று தொழில் முதலாளிகள் தமிழகத்தை விட்டு ஓடும் வண்ணம் அரசியல் செய்தவர்கள்!

24) திறமையான அதிகாரிகளை பணி செய்யவிடாமல், அச்சுறுத்தி அரசியல் செய்பவர்கள்!

25) தமிழக கணிம வளங்களை தனியாருக்கு
வாரி கொடுத்தவர்கள்!

26) இவர்கள் வசம் உள்ள சொத்துகள் எல்லாம் யார் வீட்டு பணம்?
யார் சிந்திய வியர்வை?

27) இவர்கள் பயணிக்க நம்மை ஒரு மணி நேரம் காக்க வைப்பவர்கள் யார்?

28) இன்று இது என் பிரச்சனை என்று பொதுமக்களால் தைரியமாக பேச முடியாது போனதிற்கு காரணம் யார்?

அரசியலா? "வேண்டாம் நமக்கு ஏன் வம்பு" என்று நம்மை பயப்பட வைத்தது யார்?

29) கல்வியில் சிறந்த,
உலக நாடுகள் எல்லாம் அழைத்து அரவணைக்கும் மக்களை கொண்ட நம் தமிழகத்தை,
ஒரு தலைசிறந்த ஆராய்ச்சி சார்ந்த தொழில் துறை மாநிலம் ஆக்காமல், 5000-7000 மாத சம்பளம் என்று அன்றாடங்காய்ச்சிகளாக நம் வீட்டு பிள்ளைகளை தினம் 12 மணி நேரம் உழைக்கும் வண்ணம் தொலை நோக்கில்லா அரசியல் செய்தது யார்?

30) நம் அழிவிற்கு காரணம் யார்?
பத்திரிக்கை, டிவி என அனைத்து பொது தளங்களை தங்கள் அதிகாரத்தில் வைத்து உண்மைகளை மறைப்பது யார்?

 
அதிமுகவுக்கு  திமுகவோ,
திமுகவுக்கு அதிமுகவோ மாற்று இல்லை!
அதிமுகவும் திமுகவும் வெவ்வேறு அல்ல!
இரண்டுமே ஒன்று தான்....!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...