உணவகங்கள் என்று எடுத்துக்கொண்டால் சென்னையைப் போன்ற ஒரு பகல் கொள்ளை உணவகங்களை இந்தியாவில் வேறு எங்கும் பார்க்க முடியாது..
சில பணிகள் காரணமாக திநகர் சென்றிருந்ததால் ஜி.என்.செட்டி சாலையில் நான் சென்ற வங்கிக்கு எதிரே இருந்த சங்கீதாவிற்கு மதிய உணவு சாப்பிட சென் றேன். Tamil nadu meals, north indian meals என்று இரண்டு வகை உணவுகள். சர்வர் ஆர்டர் எடுத்துக்கொண்டு போய் உணவினை கொண்டு வந்து வைத்தார். வழக்கம் போல் எல்லா ஹோட்டல்களிலும் கொடுப்பது போல சப்பாத்தி, குருமா, ஒரு பொரியல், ஒரு கூட்டு, சாம்பார், வத்தக் குழம்பு, இரசம், தயிர், அப்பளம், ஊறுகாய், பாயசம். கூடுதலாக சென்னா பொரியல் ஒன்று. ஒரு சின்ன தட்டில் (குழந்தைக்கு போதுமான அளவு உணவு) உணவிற்கு முன்னர் புளித்துப்போன ஒரு தக்காளி சூப். வாயில் வைக்க முடியவில்லை. இவ்வளவு தான் மெனு. சுவை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு மிகச் சிறிய அளவில் ஐஸ்க்ரீம். பில் வந்தது . 190 ரூபாய் . 200 ரூபாய் கொடுத்து மீதி வந்த 10 ரூபாயும் வேறு வழியின்றி டிப்ஸ் ஆகிப்போனது. ஆக 200 ரூபாய்.. பில்லுக்கு பணம் செலுத்தியபின்னர் வயிறு எரிந்ததே தவிர அது நிரம்பவில்லை. இவர்கள் கொள்ளை யடிப்பதும் இல்லாமல் சர்வர்களையும் நம்மிடம் கையேந்த வைத்துவிடுகின்றார்கள்.
இதற்கிடையே சாப்பாடு கொண்டு வரும் போதே மினரல் வாட்டர் பாட்டில் வேண்டுமா என்ற கேள்வி வேறு. 190 ரூபாய் வாங்கிக்கொண்டு உணவளிப்பவர்கள் ஒரு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்குகின்றோம் என்று சொல்வதற்குக்கூட மனமில்லை. தண்ணீரிலும் காசு பார்க்கவேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரை சரவணபவன், அடையாறு ஆனந்த பவன், வஸந்த பவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ் இவர்கள் வைத்தது தான் சட்டம். சென்னையில் உள்ள எந்த ஏரியாவிற்குப் போனாலும் இவர்களின் கிளைகள் இல்லாமல் இருக்காது. விற்கும் உணவுப்பொருட்களுக்கு இவர்கள் நிர்ணயிப்பதுதான் விலை. விலையை அடிக்கடி ஏற்றுவதும் இவர்கள்தான். இவர்களைப் பார்த்துதான் மற்றவர்கள் உணவுப்பண்டங்களின் விலையே ஏற்றுகின்றார்கள். ஏன் இவ்வளவு விலை என்றால் இந்த கேள்வியை சரவணபவன்லயோ சங்கீதாவிலோ கேக்கமாட்டீங்க. ஆனா எங்ககிட்ட தான் கேட்பீங்க என்பார்கள். அவர்கள் கேட்பதும் நியாயம் தான்.
இவர்களிடம் கேட்டால் என்ன செய்வது விலைவாசி அப்படி. ஏற்றியாக வேண்டிய சூழ்நிலை. உற்பத்தி செலவு ஏறிப்போச்சு. எவ்வளவு ஏற்றினாலும் கட்டுப்படி ஆகவில்லை. லேபர்களுக்கு சம்பளம் கொடுத்து முடியல.வேலைக்கு ஆட்கள் கிடைப்பதும் கஷ்டமாக இருக்கின்றது, தொழிலில் இலாபமே இல்லை என்பார் கள். ஆனால் இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒவ் வொரு வருடமும் தங்கள் சார்பில் ஆங்காங்கே கோடிக் கணக்கில் செலவு செய்து கிளைகளை திறக்காமல் இல்லை..
கட்டுப்படியாகமல் இருப்பவர்கள் எதற்கு கிளைகளை திறந்துகொண்டே செல்லவேண்டும்? எல்லாம் ஏமாற்று வேலை. கொள்ளை அடிக்கட்டும். அடிக்கும் கொள்ளைக் கேற்றவாறு ஒரு திருப்தியான உணவினை தரமாகவும், தேவையான அளவும் வழங்க வேண்டாமா?
இதில் சில ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதே கிடையாது. வாரச் சம்பள அடிப்படை யில் ஊதியம் வழங்குகின்றார்கள். வயிற்றுப்பிழைப் பிற்காக 12 மணி நேரம் ஊழியர்கள் வேலை செய்கின் றார்கள்.
ஒரு பக்கம் பசிக்காக உணவருந்தச் செல்பவர்களிடம் கொள்ளை. இன்னொரு பக்கம் ஊழியர்களின் உடல் உழைப்பினை சுரண்டி அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்காமல் இருப்பது. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் உள்ள ஹோட்டல் நடத்துவோர்களைப் பார்த்தாவது திருந்துவார்களா தெரியவில்லை..
இவர்கள் செய்யும் இந்த பாவச் செயல்களுக்கு வேறு ஒரு உலகில் தண்டனை என்று ஒன்று இருந்தால் அது மிகக் கொடூரமாக இருக்கவேண்டும்..
No comments:
Post a Comment