‘வெள்ளை அரிசியை ஒதுக்குங்கள், பிரவுன் அரிசியை வாங்குங்க – ஆரோக்கிய விரும்பிகளின் அட்வைஸ்
‘வெள்ளை அரிசியை ஒதுக்குங்கள், பிரவுன் அரிசிதான் பெஸ்ட்’ – ஆரோக்கிய விரும்பிகளின்
அட்வைஸ் இது. பிரவுன் (பழுப்பு) அரிசியா? வெள்ளை அரிசியா எதைச் சாப்பிடுவது?
பிரவுன் அரிசியும் வெள்ளை அரிசியும் வெவ்வேறுரகமோ , வெவ்வேறு இடங்களில் விளைபவையோ இல்லை. பிரவுன் அரிசி என்பது தவிடு நீக்காத அரிசி. நாம் தற்போது சாப்பிடும் அரிசி, தவிடு நீக்கப்பட்டு, வெள்ளை நிறத்துக்காக, நன்றாக பாலீஷ் செய்யப்பட்டது. பிரவுன் அரிசி எனப்படும் தவிடு நீக்கா த அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. அரிசியை பாலீஷ் செய்யும்போது, இந்தச் சத்துக்கள் நீக்கப்படுகி ன்றன.
பிரவுன் அரிசி யாருக்கு ஏற்றது?
அனைவருக்குமே ஏற்றது. வெள்ளை அரிசியைக் கா ட்டிலும் அதிக நார்ச்சத்து கொண்டது பிரவுன் அரிசி. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அதிக உடல் உழைப்புள்ள வேலைக ளைச் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், ஜிம்மில் வொர்க் அவுட் செய்பவர்கள் ஆகியோருக்கு மிகவும் நல்லது . இந்த அரிசியில் செலினியம் அதிகம் இருப்பதால், இதய நோய், கீல்வாதம், புற்றுநோய் போன்றவ ற்றை வரவிடாமல் தடுக்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைப்பத ற்கும், நரம்புமண்டலங்கள் சீரா க செயல்படுவதற்கும் மக்னீசியம் அவசியம். நாள் ஒன் றுக்குத் தேவையான மக்னீசியத்தில் 80 சதவிகிதம் ஒரு கப் பிரவுன் அரிசியில் கிடைத்துவிடுகிறது.
பிரவுன் அரிசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெது வாக ஏற்றும். இந்த அரிசியின் கிளைசமிக் குறியீட்டு எண், வெள்ளை அரிசியைவிடவும் குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகள், ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்ப வர்கள், உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் வெள்ளை அரிசி யைத் தவிர்த்து, பிரவுன் அரிசி யைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே பிரவுன் அரிசியைக் கொடுத்துப் பழக்குவது நல்லது. உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நடக்கவு ம், தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவும் பிரவுன் அரிசி வழிவகை செய்கிறது. செரிமானத்திறன் பிரச் னை உள் ளவர்கள், வயிற்றுப்போக்கால் அவதிப்படுப வர்கள் பிரவுன் அரிசியைத் தவிர்ப்பது நல்லது.
பிரவுன் அரிசியை எப்படிச் சாப்பிடவேண்டும்?
பிரவுன் அரிசியை வெள்ளை அரிசியைக் கா ட்டிலும் அதிக நேரம் வேகவைத்துப் பயன்ப டுத்த வேண்டும். பிரவுன் அரிசியை சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற கலவை சாதங் களுக்குப் பயன்படுத்தலா ம். சுவையும் பலனும் கூடுத லாக இருக்கும்.
பிரவுன் அரிசியை மாவாக அரைத்து, எண்ணெய் சேர் க்காமல் தோசையாகச் சுட்டு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். வேக வைத் த அரிசி சாதத்தை, அப்ப டியே விழுங்கக்கூடாது. நன்றாக மென்று சாப்பி டவேண்டும்.
வெள்ளை அரிசி யாருக் கு ஏற்றது?
நோயாளிகள், ஜீரணக்கோளாறு உடையவர்கள், பற்க ள் இல்லாததால், மென்று சாப்பிட முடியாமல்அவதி ப்படுபவர்கள் போன்றோருக்கு, வெள் ளை அரிசி ஏற்றது. வெள்ளை அரிசியி ல் சில சத்துக்கள் குறைவே தவிர, அனைவரும் பயன்படுத்தலாம்.
பிரவுன் அரிசியும் சிவப்பு அரிசியும் ஒன்றா?
சிவப்பு அரிசியும், பிரவுன் அரிசியும் வேறு வேறு ரகம். அனைத்து ரக அரிசியிலும் தவிடு நீக்கப்படாத அரிசி யே பிரவுன் அரிசி என்கிறோம். தவிடு நீக்காத சிவப்பு அரிசியை பிரவுன் -சிவப்பு அரிசி என்கிறோம். கேரளாவில் தான் சிவப்பு அரிசி அதிகளவு பயன்படுத்துகிறார்கள். தமிழக த்தில் பெரிய அளவில் புழக்கத் தில் கிடையாது. பிரவுன் அரிசி யை மெஷின் மூலம் தவிடு நீக்கிவிட்டு மேலும் மேலும் பாலீஷ் செய்யப்பட்டு கடைகளில் கிடைப்பது தான் நாம் தற்போது உணவாக பயன்படுத்தும் வெள்ளை அரிசி.
No comments:
Post a Comment