பலவருடங்களுக்கு முந்தைய நிகழ்வு...
வேலுரில் ஓர் நிகழ்ச்சியை முடித்துகொண்டு அன்றுஇரவு மதுரையில் கம்யூனிஷ்டுதோழர் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்படுகிறார்...
இரவு உணவு அருந்திவிட்டு தோழர்களுடன் நாளைய நிகழ்ச்சிகளை பற்றி பேசிக்கொண்டிருக்கையில் சிறிதுநேரத்திற்கு ஒருமுறை வீட்டின் தோட்டத்திற்கு சென்று பார்த்துவிட்டு வருகிறார்...
அய்யா நல்லக்கண்ணு... அவர்களின் இந்தசெயலை பார்த்து தோழர்கள் தயங்கியவாறே அய்யா ஏதாவது உதவிதேவையா என்று வினவுகின்றனர்...
நல்லகண்ணு அவர்கள்..
இல்லை ஊரில் இருந்து வரும்போது இரண்டுவேஷ்டியும்,இரண்டு சட்டையும் கொண்டு வந்தேன் இரண்டும் அழுக்காகிவிட்டது நாளைய நிகழ்ச்சிகளுக்கு போகவேண்டும் என்றால் அதைதுவைத்து போடவேண்டும் அதுதான் வீட்டின் தோட்டத்தில் துவைப்பதற்கு பாறாங்கல் இருக்கின்றதா என்று பார்த்துவிட்டு வருகின்றேன் என்றார்..

தமிழக வலதுகம்யூனிஷ்டு செயளாலர் பதவியை பதின்மூன்று ஆண்டுகாலம் அலங்கரித்துவிட்டு வெளியே வரும்போது கட்சிகொடுத்த ஒருகோடி ரூபாயையும்,ஓர் காரையும் கட்சிக்கை நிதியாக திருப்பி அளித்துவிட்டு ஹவுஷிங்போர்டு குடியிருப்பில் இன்றுவரை வாடகைக்கு குடியிருக்கும் இந்த மாமமனிதரை என்னவென்று சொல்வது...
வாழ்த்துக்கள் அய்யா...
தமிழகத்தின் கருப்புவைரம் அய்யா நீங்கள்.
No comments:
Post a Comment