Thursday, February 18, 2016

பிடிச்சிருந்தால் ஷேர் பண்ணுங்க.



நாட்டுப் பற்று, சொந்தம் பந்தம் பற்றி பேசுவோம் ஆனால் நமக்காக ஊருக்காரன் விளைவித்த பொருளை வச்சிருக்கும் கடையில் போய் வாங்குவதற்க்கு தயங்குவோம்
.
அரிசி போட்டவுடன் வேகனும் சோறு பளபளன்னு வெள்ளையா இருக்கணும் பொடிசா இருக்கணும் ஆனா நோய் வரக்கூடாது.
.
பழுப்பு நிறத்துல இருக்ற அரிசிய வெள்ளையா கேட்டா அவன் எதையாவது போட்டு கலரா மாத்ததான செய்வான்? தப்பு யார் மேல? நம்ம மேலதானே ?
.
கீரை பச்சையா இருக்கணும், இலையில சின்ன ஒட்டைகூட இருக்ககூடாதுன்னு கீரைக்காரியிடம் சண்டை போடுவோம் அவ விளைவிக்கிறவனிடம் சொல்கிறாள், விளைய வைக்றவன் பூச்சி மருந்த அடிக்றான். நாமும் நல்லா இருக்கிறதென்று வாங்கி சாப்பிடுகிறோம்
.
அப்றோம் அது வலிக்குது இது வலிக்குதுன்னு டாக்டர் இடம் போகிறோம் அங்கே என்ன நடக்குது? இதுக்கு ஒழுங்கா நாலு கீரை பூச்சி கடிசிருந்தாலும் கழுவி தின்னுருக்கலாம்ல?
.
பூச்சிகள் கடித்திருக்கும் காய்கறிகள்தான் மருந்து அடிக்காமல் விளைந்த பொருள் அதுதான் நல்லது என்று டாக்டரே சொல்றாரே அதை கேர்க்கிறோமா ?
அதில் சிறிய துண்டை அகற்றிவிட்டு சமைச்சா குறைஞ்சா போயிடுவோம் ? பூச்சிக்கு தர்மம் செய்ததுபோல் நினைத்துக்கொள்ளலாமே ? தர்மம் தலை காக்கும்னு சும்மாவா சொன்னாங்க ?
.
நல்லது எது கெட்டது எதுன்னு புரியாம வாழ்ற நம்மைவிட இன்னும் ஆடு மாட வச்சு சானிய அள்ளி உரமாக்கி எங்கே ஒரு மூலை'ல நமக்காக உழைச்சிட்டு இருக்கானே அவன் எவ்வளவு மேலானவன் என்பதை உணர்கிறோமா ?
.
நல்லதை நினைப்போம், நமக்கு சாப்பிட கொடுத்தவனை நினைப்போம். அண்ணிய வரவை தடுப்போம்.
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...