Wednesday, February 17, 2016

நல்லாட்சியை வழங்கியது அ.தி.மு.க.,வே: கருத்துக் கணிப்பில் 34.8 சதவீதம் பேர் ஆதரவு

தமிழகத்திற்கு நல்லாட்சியை அ.தி.மு.,க.,தான் வழங்கியுள்ளது என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துகணிப்பு தெரிவிக்கிறது.

தமிழகத்தின் நாடிக்கணி்ப்பு 2016 என்ற தலைப்பில் புதிய தலைமுறை கருத்துகணிப்பு நடத்தியது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் அளித்த பதில்கள் அடிப்படையில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

நல்லாட்சியை வழங்கிய அரசு எது என்ற கேள்விக்கு 34.8 சதவீதம் பேர் அ.தி.முக.,விற்கு ஆதரவாகவும், 33.33 சதவீதம் பேர் தி.மு.க.,விற்கு ஆதரவாகவும் ஓட்டளித்துள்ளனர்.



சட்டம் ஓழுங்கு பாதுகாப்பு எந்த அரசு சிறந்தது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக 36.65 சதவீதம் பேரும் தி.மு.க.,விற்கு ஆதரவாக 29.63 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.

விலைவாசி கட்டுப்படுத்துவதில் சிறந்த அரசு எது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவாக 27.79 சதவிதம் பேரும் தி.மு.க.,விற்கு ஆதரவாக 35.41 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.

ஊழலற்ற ஆட்சி எது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவாக 29.68 சதவீதம் பேரும் தி.மு.க.விற்கு ஆதரவாக 19.12 சதவீதம் பேரும் இரண்டும் இல்லை என்று 43.63 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.

ஏழைகள் நலனு்க்காக பாடுபடும் அரசு எது என்ற கேள்விக்கு அ.தி.மு.க.விற்கு ஆதரவாக 35.04 சதவீதம் பேரும், தி.மு.க.விற்கு ஆதரவாக 30.96 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.

பொதுவிநியோகம் எந்த ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டது என்ற கேள்விக்கு அ.தி.முக.விற்கு ஆதரவாக 37.06 சதவீதம் பேரும் தி.மு.கவிற்கு ஆதரவாக 31.52 சதவீதம் பேரும் ஓட்ளித்துள்ளனர். 
கொடுத்த வாக்குறுதிகளை யார் நிறைவேற்றினர் என்ற கேள்விக்கு அ.தி.முக.,விற்கு ஆதரவாக 31.83 சதவீதம் பேரும் தி.மு.க.,விற்கு ஆதரவாக 27.66 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...