Sunday, February 7, 2016

கலெக்டர் எல்லா மாவட்டத்திலுஇருந்தா ம் தமிழ்நாடு நல்ல நிலைக்கு சீக்கிரமா வந்துரும்.



இப்படி ஒரு த்தில்லான கலெக்டர் எல்லா மாவட்டத்திலுஇருந்தா ம் தமிழ்நாடு நல்ல நிலைக்கு சீக்கிரமா வந்துரும்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டவர் கெஜலட்சுமி. இந்த மழை பாதிப்பினால் அடையாறு ஆற்றின் குறுக்கே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த பல கட்டிடங்களை இடிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்து அதற்கான பணிகளை உடனிருந்து கவனித்து வருகின்றார். இவரிடம் யாரும் நெருங்க முடியவில்லை. ரொம்ப கறார்..
Image result for காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டவர் கெஜலட்சுமி.
ஆளும் கட்சி சார்ந்தவர்கள் யாரையும் இவர் பக்கத்தில் வர அனுமதிப்பதில்லை. தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் மணிமங்கலம், வரதராஜபுரம் பகுதியிலிருந்து மழை நீர் வெளியேற அடையாறு கால்வாயில் சேர இந்தப் பகுதியில் மிகப்பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாயின் நீளம் 14கி.மீட்டர். நீளம் மட்டும் மாற வில்லை.இதன் அகலம் 60 மீட்டர். இது மெல்ல மெல்ல சுருங்கி சில வருடங்களில் 18 மீட்டராக மாறியது. விளைவு அந்த பகுதியில் உள்ள எல்லா இடங்களும் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் பரிதவித்தனர். இதனை ஆய்வு செய்த இந்த கலெக்டர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், காம்பவுன்ட்டு சுவர்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுதும் பணிகள் தற்போது விரைந்து நடைபெற்றுக் கொண்டுவருகின்றது. ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு தூர்வாரப்படுகின்றன.
அடுக்குமாடிக்குடியிருப்புகள் கூட இந்த ஆற்றினை ஆக்கிரமித்து கட்டியுள்ளார்கள். அத்தனையும் இடிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆட்சியருக்கு துணையாக வெள்ள பாதிப்பு நிவாரண அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். அவர்களும் உடனிருந்து பணியாற்றுகின்றார். இந்த அடாத மழையிலும் இதுவரை 7கி.மீ.தூரத்திற்கு ஆக்கிரமிப்பு கள் விரைவாக அகற்றப்பட்டு விட்டது. பல அடுக்குமாடிக்கட்டி டங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு விட்டது.
இப்போது இந்த ஆறு மிகப்பெரியதாக காட்சியளிப்ப தோடு அந்தப் பகுதியில் தண்ணீர் வெகுவாக வடியத் தொடங்கி உள்ளது. அந்தப் பகுதி மக்கள் இவரை வெகு வாக பாராட்டுகின்றனர். இப்படி நேர்மையானவர்களும் துடிப்பானவர்களும் அதிகாரிகளாக இருப்பார்களே யானால் அவர்களுக்கு அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு தராமல் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி அவர்களை பணியிடமாற்றம் செய்து அவர்களின் செயல்களை முடக்கி விடுகின்றனர் என்பது தான் வேதனை.
இனியாவது இதுபோன்ற அதிகாரிகளை மக்களுக்காக சிறப்பான பணிகளையும் தங்கள் கடமைகளையும் ஆற்றவிடுங்கள் அரசியல்வாதிகளே! உங்கள் சுயநலத்திற்காக அவர்களை முடமாக்காதீர்கள். இதுபோன்றவர்களின் துணிச்சலான பணிகளால் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் இனியாவது நிம்மதியாக இருப்பார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...