Monday, February 15, 2016

தமிழ்நாட்டில்மதுவிலக்கை செப்டம்பர் 1971ல் நீக்கியது

அட.... கோமாளி கோவன்... இதையும் தெரிஞ்சுக்கோ.....!
பூரண மதுவிலக்கு இருந்த ,தமிழ்நாட்டில்மதுவிலக்கை செப்டம்பர் 1971ல் நீக்கியது. மதுவிலக்கை நீக்கியாயிற்று. மது தயாரிக்க மது ஆலைகள் வேண்டுமல்லவா ?
யார் யாருக்கெல்லாம், மது ஆலை நடத்துவதற்கான தகுதி இருக்கிறது என்பதையும் விண்ணப்பங்களை வரவேற்கும் முன்பே அறிவிக்கப் படுகிறது. அதன் படி, விண்ணப்பிப்பவரின் நிதி நிலை நன்றாக இருக்க வேண்டும், நிர்வாகத் திறனை மாநில அரசு மதிப்பிட்டு சான்றளிக்க வேண்டும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

DMKFails's photo.
போதையிலும் போதை தமிழ் போதை தலைச்சிறந்த போதையல்லவா ? இவர்தான் முத்தமிழையும் வித்தவர் ஆச்சே...
ஒரு எட்டு கம்பெனிகள் விண்ணப்பித்தார்கள். எட்டு கம்பெனிகளைப் பற்றியும் தொழில் துறை செயலாளர் கோப்பில் எழுதிவைக்கிறார். இவ்வாறு எழுதிய பிறகு நடக்கும் கூட்டத்தில் கருணாநிதி புதிய உத்தரவிடுகிறார். “பீர் தொழிற்சாலையை நிறுவுவதற்காக இன்னொரு விண்ணப்பதாரரை தெரிந்தெடுக்கலாம்” ஏன் அந்த எட்டு கம்பெனிகள் பீர் தயாரிக்காதா ? இல்லை தயாரிக்க மாட்டேன் என்று கருணாநிதியிடம் சொன்னார்களா ? ஆனால் கருணாநிதி இன்னொரு பெட்ரோமாக்ஸ் லைட் வைத்திருக்கும் இன்னொரு நிறுவனம்தான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார். கருணாநிதி முதலமைச்சர் அல்லவா ? முதல்வர் வார்த்தைக்கு மறு பேச்சு உண்டா ?
இவ்வாறு உத்தரவிட்ட பிறகு, ஏ.எல்.சீனிவாசன் என்பவர் புதிய விண்ணப்பத்தை அளிக்கிறார். இப்போது இந்த எட்டு பேரில் யார் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் ? கண்டு பிடித்து விட்டீர்களா… ? வேறு யார் ? எட்டாவதாக வந்த நபர்தான். அந்த கடைசி நபருக்குத்தானே டெண்டரே மாற்றப் பட்டது ? கடைசியாக விண்ணப்பித்தவர் பெயர் ஏ.எல்.சீனிவாசன். ஏ.எல்.சீனிவாசனோடு சேர்ந்து மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கும் மது ஆலைக்கான ஆணை வழங்கப்படுகிறது.
ஏ.எல்.சீனிவாசன், சுல்தான் மரைக்காயர் அன்ட் சண்ஸ் லிமிட்டெட், கோத்தாரி அண்டு சன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.
சரி ஏ.எல்.சீனிவாசன் மட்டும் தான் பின்வாசல் வழியாக நுழைந்தார், மற்ற இரு நிறுவனங்களும் ஒழுங்காக ஆணை பெற்றிருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். சுல்தான் மரைக்காயர் மற்றும் கோத்தாரி நிறுவனங்களின் மீது, சர்க்காரியா விசாரணை ஆணையத்திலேயே இரண்டு தனி விசாரணைகள் நடைபெற்றன.
சரி யார் இந்த ஏ.எல்.சீனிவாசன் ? சாரதா ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர்தான் இவர். எதற்காக கருணாநிதி இவருக்கு உதவ வேண்டும் என்றால், ஏ.எல்.சீனிவாசன் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மெஜெஸ்டிக் ஸ்டுடியோ தொடர்பாக தனக்கு வரவேண்டிய பாக்கியை கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில் தள்ளுபடி செய்ய வேண்டி வந்தது என்று பக்தவச்சலம் என்பவர் சாட்சியம் அளித்தார். இது மட்டுமல்ல, அரசு செய்தி நிறுவனம் இருக்கிறது அல்லவா… ? அது தயாரிக்கும் படங்கள் தொடர்பாக பெரும்பாலான பணிகள் ஏ.எல்.சீனிவாசனின் சாரதா ஸ்டுடியோவுக்கே வழங்கப் பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கு கட்ட வேண்டிய வருங்கால வைப்பு நிதியை சாரதா ஸ்டுடியோஸ் கட்டவேயில்லை. இது தவிரவும் பல்வேறு காரணங்களுக்காக சாரதா ஸ்டுடியோஸில் நடந்த வேலை நிறுத்தத்தை அப்போது இருந்த தொழிலாளர் துறை அமைச்சர் என்.வி.நடராஜனை வைத்து, தொழிலாளருக்கு எதிராக ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட தொழிலாளர் அமைப்புகளை வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்ததாகவும், விசாரணையில் தெரிய வந்தது. பாட்டாளிகளின்  பிரதிநிதி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கருணாநிதி, தொழிலாளிகளின் வயிற்றிலும் அடிக்கத் தவறவில்லை. சென்னையில், செங்கொடி இயக்கத்தின் பிடியில் இருந்த பெரும்பாலான தொழிற்சங்கங்களை உடைத்து, அதில் திமுக ச ங்கமான தொ.மு.ச வை தொடங்கி, முதலாளிகளோடு சமரசம் செய்து தொழிலாளிகள் வயிற்றில் அடிக்கும் வழக்கத்தை தொடங்கி வைத்தது திமுகவே.
மது ஆலை அமைக்க விண்ணப்பிக்க தகுதியானவை என்று சில நிபந்தனைகள் விதிக்கப் பட்டிருந்தன என்று குறிப்பிடப் பட்டிருந்தது அல்லவா ? அதில் ஒரு விதி, நிதி நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பதும் ஒன்று. நிதி நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பது, சாதாரணமாக அரசு ஆணை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். அரசுத் துறைக்கு டெண்டர் விண்ணப்பித்தீர்கள் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளின் ஆண்டுக் கணக்கு, வருமான வரி கணக்கு ஆகியவற்றை இணைக்கச் சொல்வார்கள்.
அவற்றுள் முக்கியமானது, தொழிலாளர் வைப்பு நிதியை தவறாமல் செலுத்த வேண்டும் என்பதே. தொழிலாளர் வைப்பு நிதியை பல்வேறு நிறுவனங்கள் கட்டாமல் ஏமாற்றுகின்றன என்பதற்காக, அந்த தனியார் நிறுவனங்களை கட்ட வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, தொழிலாளர் வைப்பு நிதியை சரியாக செலுத்தாத நிறுவனங்கள், அரசு டெண்டர்களில் பங்கெடுக்க முடியாது.
தொழிலாளருக்கு சட்டபூர்வமான ஒரு விதிப்படி கட்ட வேண்டிய கட்டணத்தையே செலுத்தத் தவறிய ஒரு நபர் எப்படி நல்ல நிதி நிலையில் இருப்பார் ? அவருக்கு எப்படி ஆணை வழங்க இயலும் ? ஏ.எல்.சீனிவாசன், தொழிலாளர் வைப்பு நிதியை கட்டாமல் ஏமாற்றியவர். ஆனாலும் என்ன ? தமிழினத் தலைவரின் ஆருயிர் தோழருக்கு இந்த விதிகளெல்லாம் பொருந்துமா என்ன ?
1973 ஜுன் மாதத்தில், ஏ.எல்.சீனிவாசனுக்கு பீர் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கப் படுகிறது. அனுமதி கடிதத்திலேயே ஆறு மாதங்களுக்குள் தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என்று, குறிப்பிடப் படுகிறது. சீனிவாசன் என்ன செய்கிறார் தெரியுமா ? ஆறு மாதங்களுக்குள் என்னால், தொழிற்சாலையை நிறுவ முடியாது… அதனால், 18 மாதங்கள் அனுமதி கொடுங்கள் என்று கேட்கிறார். இவ்வாறு கேட்ட ஒரே காரணத்திற்காகவே, இவரது லைசென்ஸை ரத்து செய்திருக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குள் தொழிற்சாலையை நிறுவத் தவறிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டு, அடுத்த நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவரது கோரிக்கையை பரிசீலித்து, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்கிறது.
அப்போதாவது அந்த ஆள் தொழிற்சாலையை தொடங்கினாரா என்றால் இல்லை. அப்போதும் மேலும் 12 மாதங்கள் அவகாசம் கேட்கிறார். ஏ.எல்.சீனிவாசனைப் பார்த்து “நீ ஆணியே புடுங்க வேண்டாம்” என்று, அவருக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்கிறார்கள்.
விசாரணையின் இறுதியில், மதுபான தொழிற்சாலை அமைப்பதற்காக ஏ.எல்.சீனிவாசன், ஒரு துண்டு நிலத்தைக் கூட வாங்கவில்லை என்பது தெரிய வந்தது. சீனிவாசனின் உண்மையான நோக்கம், சென்னை புறநகரில், இந்த மதுபான தொழிற்சாலைக்கு கிடைத்த லைசென்சை வைத்து 100 ஏக்கர் நிலத்தை ஆட்டையயை போட முயற்சித்தது மட்டும் தான் என்பதும் தெரிய வந்தது.
இப்படி ஏ.எல்.சீனிவாசன் நிலத்தை அபகரிக்க எழுபதுகளிலேயே உதவி, அன்றைக்கே நில அபகரிப்பு டெக்னிக்கை தொடங்கியவர்தான் கயவர் கருணாநிதி. இந்தக் குற்றச் சாட்டும் நீதிபதி சர்க்காரியாவால் நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்த ஏ.எல்.சீனிவாசனுக்கு அளித்த சலுகையின் தொடர்ச்சியே, இன்று ஜெகதரட்சகனின் மது ஆலையும், அதிலிருந்து ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு கருணாநிதி அரசு வாங்கிக் குவிக்கும் மதுக்களும். கொள்ளையடிப்பது, அரசுப் பணத்தை அபகரிப்பது, ஊரை அடித்து உலையில் போடுவது, இவை அத்தனையின் மொத்த வடிவமும் கருணாநிதிதான்.

No comments:

Post a Comment