Friday, April 1, 2016

அடிக்கடி நூக்கல் காயை சமைத்து சாப்பிட்டால் . . .

அடிக்கடி நூக்கல் காயை சமைத்து சாப்பிட்டால் . . .

அடிக்கடி நூக்கல் காயை சமைத்து சாப்பிட்டால் . . .
பொதுவாக காய்கறி வகைகளில் பல காய்கள் வேக வைக்காமல் எளிமை யான வகையில் சாப்பிடக் கூடியவையாக இருக்கும். ஆனால்
நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே இதனை நன்கு வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். இதற்கு நூற்கோல் என மற் றொரு பெயரும் உண்டு. இதில் வைட்டமின்களும், புரத சத்தும் நிறைந்துள்ளது. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். முற்றிய நூக்கலை வாங்குவதை விட பிஞ்சு நூக்க லை வாங்குவதே சிறந்தது.
நூக்கல் காயின் பயன்கள்

குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண் டது.
ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.
குடல் நாளங்களை உறுதிப்படுத்தும் எலும்புகளை உறுதியா க்கும்.
நூக்கல் காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.
நூக்கல் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பெருக்கும்.
நூக்கல் சூப்
முதலில்சீஸை(Cheese) துருவிக்கொள்ளவும்.வெங்காய த்தாளை நறுக்கிக்கொள்ளவும்.நூக்கல்லை துருவி வேக வைத்துக் கொள்ள வேண்டும்.  வெண்ணெய்யை உருக்கி வெங்காயத்தாள்களை அதில் போட்டு வதக்கவும். பிறகு தண்ணீர் சேர்த் து பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

இறுதியில் சூடான பால், வேகவைத்த நூக்கல், சீஸ், மிளகுத் தூள் ஆகிய வற்றைச் சேர்த்து 2 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கினால் நூக்கல் சூப் ரெடி
பயன்கள்
ரத்தச் சோகையை நீக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து.
நூக்கல் பொரியல்

பருப்புகளை நன்றாகக் கழுவிவிட்டு,ஒரு வாணலியில் போட்டு அது வேகும் அளவைவிட சிறிது கூடுதலாக தண் ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும். சிறிது மஞ்சள்தூள், பெரு ங்காயம் சேர்த்து மூடி வேக வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், நூக்கல் இவற்றை விருப்பமான வடிவத் தில் நறுக்கி வைக்கவும். பருப்பு பாதி வெந்த பிறகு நறுக்கி வைத்துள்ள வற்றை அதனுடன் சேர்த்து, தேவையான உப்பு ம் சேர்த்து வேக வைக்கவும். காய் வெந்துகொண்டி ருக்கும்போதே மிள காய்த்தூளை சேர்த்துக் கிளறி விட வும்.
காய் வெந்து, நீர் வற்றியதும் தேங்காய்ப் பூ, கொத்த மல்லிஇலை சேர்த்துக்கிளறிவிட்டு இறக்கவும்.இப்போது ஒருதாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக் கவேண்டிய வற்றைத் தாளித்து கொட்டினால் நூக்கல் பொரியல் தயார்.
பயன்கள்
புற்றுநோயை தடுக்க வல்லது.
உடல் எடையை குறைக்க உதவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...