ஒரு பேய் பங்களா இருக்கு, அங்கே நிறைய ஆவிகள் இருக்கு, அங்க போனால் மர்மான சத்தம் கேட்கும், உருவங்கள் தெரியும், யாரோ பின்னாடி நின்று தொடுகிற மாதிரி இருக்கும்.....
- இப்படியெல்லாம் எக்கச்சக்கமான கதைகள் கேள்விபட்டிருப்போம். இதெல்லாம் பொய் என்றும் உண்மை என்றும் வாதாடும், சண்டை போட்டுக்கொள்ளும் பலரும் உள்ளனர். ஆனால் ஒரு புதிய அறிவியல் ஆய்வு, இவற்றின் பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் காரணிகளை எடுத்துரைக்கிறது.
1. சிலரது மூளையில் ஏற்படும் சிறு மின்னூட்டல் விளைவுகள் (electrification), அவர்களை தன்னிலை மறக்க செய்கின்றது. உதாரணமாக, தாங்கள் கை அசைக்கும்போது, 'நாம் தான் இதை செய்கின்றோம்', 'என் கைதான் அசைகிறது' என்கிற உண்மையை உணரச்செய்யும் சுய உணர்தல் தொழிற்பாடு (self sensing ) இதன்போது அற்றுப்போகிறது. இதனால், தாம் செய்கின்றவற்றை வேறு யாரோ செய்வது போல / செய்விப்பது போல உணர்கின்றனர் என தெரியவந்துள்ளது.
2. தாழ் மீடிறன் கொண்ட ஒலிகள் எமக்கு கேட்பதில்லை. ஆனால் எம் காதுகள் அவற்றை உணரும். அப்படி உணரும்போது, ஒரு வித அச்ச/அபாய உணர்வை அவை ஏற்படுத்தும். இதற்கு இயற்கைதான் காரணம் என்கிறது அறிவியல். அதாவது, பொதுவாக நம்மை சுற்றி கேற்கும் தாழ் மீடிறன் ஒலிகள் எல்லாமே அனேகமாக அபாயத்தை தோற்றுவிப்பதாக உள்ளதால்... (உ + ம் :- சிங்கத்தின் கர்ச்சனை, எரிமலை குமுறல், இடியோசை, விலங்குகளின் உறுமல், .....) நமது உடல்/மூளை இப்படிப்பட்ட தாழ் மீடிறன்களை உணரும்போதேல்லாம் இந்த அபாயம் ! அச்சம் ! உணர்வை தோற்றுவிக்கிறது. ஆவிகள் நடமாடுவதாக சொல்லப்படும் இடங்களில் இத்தகைய அதிர்வுகள் உணரப்பட்டு இருக்கின்றன. இவை தூரத்திலுள்ள ஏதேனும் இயந்திரத்தின் விளைவாலோ, பூமியின் இயற்கை தோற்றப்பாடுகள் காரணமாக எழுந்தவை.
3. பேய்கள் உலாவுவதாக சொல்லப்பட்ட பல இடங்களுக்கும் சென்று ஆராய்ந்ததில், அந்த இடங்களில் உள்ள காற்றில், சில விசித்திரமான/தீங்கான வாயுக்கள் காணப்படுவதாயும், அந்த காற்றை சுவாசிக்கும்போது, எமது புலன்கள் (பார்வை, கேட்டல், தொடுகை...) பாதிப்படைவதாயும் தெரியவந்துள்ளது.
அதாவது, புலன்கள் செயலற்று போவது ஒரு புறமிருக்க, பல போலி தோற்றப்பாடுகளை தோன்ற செய்யும். ஏதோ சத்தம் கேட்டது போல் உணர செய்வது, தோலில் எதோ உரசியது போல தோன்ற செய்வது, பார்வை மங்கலடைவது அல்லது வெள்ளை நிற புள்ளிகள் தோன்ற செய்வது எல்லாமே இதில் அடங்கும். சில சமயம், உண்மை எது கற்பனை எது என்பதை கூட உணர முடியாதபடி, நம் மூளை நமக்கு முன்னால் பல தோற்றங்கள்/உருவங்களை உருவாக்கும். வாயுக்களின் தாக்கம் அற்றுப்போனவுடன் இந்த நிலைமையும் அற்றுப்போகும் என்றும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
No comments:
Post a Comment