படிக்கிறதுக்கு கடன் வாங்கி திரும்பி கட்ட முடியாம வங்கியின் நெருக்கடியால் "லெனின்" என்ற பெறியியல் மாணவன் தற்க்கொலை..கபாலி அலையில் கரைந்து போன.. நாம் மறந்துபோன நம் நாட்டின் மற்றுமொரு அவமானம்.
இந்த செய்தி அடையவேண்டிய முக்கியதுவத்த அடையாம போனது..இந்த சமூகத்தின் கையாலாகத் தனத்தை உணர்துகிறது.
ஒரு சுதந்திர நாட்டுல படிக்க விரும்பின ஒருத்தனுக்கு கடன் கொடுத்து படிக்க வைகிறதே ஒரு அவமானம் தான்...அதென்ன படிக்கற்துக்கு கடன்? பிள்ளைய படிக்க வைக்கிறது அரசாங்கத்தின் கடமை இல்லையா? ஒரு அடிப்படை உரிமை இல்லையா? அதை எல்லாம் மறந்துட்டு அரசாங்கம் கடன் வாங்கி வேணும்னா படிசுக்கோனு சொல்லுது...
எவ்வளோ இலவசம் இருக்கு...கல்வி ஏன் இலவசமா இல்ல?
வாங்கின கடன வசூலிக்க அந்த வங்கி "ரிலையன்ஸ்" கம்பேனி கிட்ட பொருப்ப குடுக்குது.. அவன் ஒரே நாள்ல கட்டூங்குறான்..ஒரே நாள்ல கட்டணுனு எங்கயுமே சட்டம் இல்ல..
லெனின் வாங்கின கடன் ரூ.1,90,000 - சட்டம் என்ன சொல்லுதுனா படிப்பு முடுஞ்சு ஓர் ஆண்டுக்கு வட்டி கிடையாது..அதன் பிறகு 11% வட்டி..
1,90,000க்கு 2015 முழுக்க ஒரு வருஷம் வட்டி போட்டாலே 2,10,000 தான் வருது.....ஆனா ரிலையன்ஸ் நிருவனம் லெனின 2,48,000 பதினைந்து நாளைக்குள்ள கட்டுனும்னு சொல்லி கெடு அனுப்புது...அப்படி பதினைத்து நாளைக்குள்ள அனுப்ப கூடாதுனும் சட்டம் சொல்லுது...
மாசம் மாசம் 5,000 அலவுல 60 மாதங்களாதான் வசூலிக்கனும்னு சொல்லுது...
மாசம் மாசம் 5,000 அலவுல 60 மாதங்களாதான் வசூலிக்கனும்னு சொல்லுது...
இப்படி திடீர்னு வசூலிக்குர அதிகாரத்த.... லெனின மிரட்டி ஒரு நெருக்க்கடிக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தள்ளின உரிமைய ரிலையன்ஸுக்கு யார் கொடுத்தது?
சரி இதையெல்லம் செஞ்ச ரெலியன்ஸு எவ்வளோடா கடன் பாக்கினா அது ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரன் கோடி கடன் பாக்கி வச்சிருக்கு...எங்க ரிலையன்ஸ் கம்பெனிக்கும் அம்பானிக்கும் கெடி கொடுத்து கடன வசூலிங்க பார்ப்போம்?
இத கண்டிச்சு "இந்திய மாணவர் சங்கம்" மற்றும் சில இடதுசாரி அமைப்புகள் மட்டும்தான் களத்துல இறங்கி போராடுச்சு..அதையும் பிடிச்சு உள்ள போட்டுடாங்க...
ஒருத்தனோட சாதிய பத்தி குறை சொல்லிட்டா...ஒருத்தன் நம்புற மதத்த குறை சொல்லிட்டா..வெகுண்டு எழுந்து ஊரையே கொளுத்துதுர வீராதி வீர சிங்கம் புலி கரடி கூட்டம் எல்லாம் இந்த மாதிரி கல்வி சார்ந்த பிரச்ச்னைகளுக்கும் கொஞ்சம் உங்க வீரத்த காட்டுங்கையா...
நம்ம திரும்ப மொதல்ல இருந்து தொடங்குவோம்...இப்போ கபாலி போயி அடுத்து தல தளபதி படம் எப்போ வரும்னு தேவுடு காத்துட்டு நிப்போம்..இன்னும் நிறைய லெனின் சாக இருக்காங்க..நமக்கு என்ன கவல..
No comments:
Post a Comment