Friday, March 8, 2019

எதிர்பார்ப்பு! 2 தொகுதிகள் கேட்கிறார் வாசன்.

அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா.,வுக்கு, இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படும் என, அக்கட்சி எதிர்பார்க்கிறது.
அ.தி.மு.க., கூட்டணி,த.மா.கா.,வாசன்


தே.ஜ., கூட்டணியின், முதல் தேர்தல் பிரசாரக் கூட்டம், 06/03/19
 சென்னை, வண்டலுார் அருகில் நடந்தது. இதில், த.மா.கா., தலைவர், வாசன் பங்கேற்பார் என, அ.தி.மு.க., மேலிடம் கருதியதால், மேடையில், அவர் படம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தொகுதி உடன்பாடு ஏற்படாததால், வாசன் பங்கேற்க மறுத்து விட்டார். அதையடுத்து, அவரது படம் அகற்றப்பட்டது.


இந்நிலையில், சென்னை வந்துள்ள, மத்திய அமைச்சர், பியுஷ் கோயல், வாசனுடன், தொலைபேசியில் பேசியுள்ளார். இரு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் எதிர்பார்ப்பதாக, வாசன் கூறியிருக்கிறார். அதற்கு பியுஷ் கோயல், அ.தி.மு.க.,விடம் பேசிய பின், நாளை முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்.


இதையடுத்து, அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., இடம்பெறுவது, உறுதியாகி உள்ளது. இது குறித்து, த.மா.கா., மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'தே.மு.தி.க.,வுக்கு, ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், எங்களுக்கு ஒரு தொகுதியும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் தரப்படும். தே.மு.தி.க.,வுக்கு, நான்கு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டால், எங்களுக்கு, இரண்டு தொகுதிகள் கிடைக்கும்' என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...