Thursday, March 7, 2019

நடந்தால் ஆறு... எழுந்தால் அருவி! -இன்று சர்வதேச பெண்கள் தினம்.

பெண் என்பவள் குழந்தை, சகோதரி, மனைவி, தாய் என பல பரிணாமங்களாக திகழ்கின்றனர். 'உடல் வலிமை ஆண்களுக்கு பலம் என்றால், மன வலிமை பெண்களுக்கு பலம்' என வல்லுநர்கள் கூறுகின்றனர். பெண்களின் முன்னேற்றத்தை பொறுத்தே நாட்டின் முன்னேற்றமும் அமைகிறது. 

சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 'சிறந்த நிலைக்கான சமநிலை' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

அன்று பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால் இன்று படித்த பெண்களின் எண்ணிக்கையும், வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சில வீடுகளில் பெண்கள் தான் வேலைக்கும் சென்று, குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு ஓய்வில்லாமல் பணியாற்றுகின்றனர். 

நடந்தால் ஆறு... எழுந்தால் அருவி! -இன்று சர்வதேச பெண்கள் தினம்

ஆண்களுக்கு நிகரான அனைத்து வேலைகளையும் பெண்களும் செய்கின்றனர். ஆசிரியை, விண்வெளி வீராங்கனை, டாக்டர், விளையாட்டு வீராங்கனை, இன்ஜினியர், பைலட், தொழில் முனைவோர் என பல துறைகளிலும் பெண்கள் வெற்றி நடை போடுகின்றனர். 

கிடைக்குமா வாய்ப்பு:
பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்திருந்தாலும், அரசியலில் அவர்களுக்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுகிறது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது பல ஆண்டுகளாக கோரிக்கையாகவே தொடர்கிறது. பெண்களின் இந்த உரிமையை, சிலர் சலுகையாக நினைத்து மறுப்பது வேதனைக்குரியது. 

வேண்டும் மாற்றம்:
பெண்களை கடவுளாக பார்க்கும் நம் நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்கொடுமைகளும் நடக்கின்றன. சிறுமிகள் கூட பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவது வேதனையான செயல். வரதட்சணை, பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, சிசுக்கொலை போன்றவையால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். 

பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகள் வழங்க வேண்டும். பெண்கள் மீதான வன்முறையை முற்றிலுமாக தடுப்பதற்கு, குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இதற்கு அதிகார மையங்களில் பெண்கள் பரவலாக்கப்பட வேண்டும். மேலும் பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வையும் மாற வேண்டும். ஆண்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டால் தான், பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...