Thursday, March 7, 2019

மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., மல்லுக்கட்டு தி.மு.க., அணியில் திடீர் குழப்பம்.

தி.மு.க., கூட்டணியில், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கூடுதலாக, ஒரு லோக்சபா தொகுதி கேட்டு, ம.தி.மு.க.,வும் மல்லுக்கட்டுவதால், உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடிக்கிறது.
மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., மல்லுக்கட்டு,D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்

தி.மு.க., அணியில், காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே., ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில், புதுச்சேரி உட்பட, 10 தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் லீக் - கொ.ம.தே.க., - ஐ.ஜே.கே., ஆகிய கட்சிகளுக்கு, தலா, ஒரு லோக்சபா தொகுதியும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தலா, இரண்டு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில செயலர், கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினரிடம், தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர், சென்னை, அறிவாலயத்தில், நேற்று பேச்சு நடத்தினர். 

மார்க்சிஸ்ட் சார்பில், கோவை, கன்னியாகுமரி தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், தி.மு.க., தரப்பில், இரு லோக்சபா தொகுதிகள் மட்டும் தருவதற்கு, சம்மதம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிலும், கன்னியாகுமரி தொகுதியை, காங்கிரஸ் கேட்பதால், அத்தொகுதியை கொடுக்க முடியாது என, தி.மு.க., மறுத்துள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தங்கள் முடிவை நாளை தெரிவிப்பதாக கூறி, பாதியில் வெளியேறியுள்ளது.

அறிவாலயத்தில், கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், ''நாங்கள் போட்டியிட விரும்புகிற தொகுதிகளின் எண்ணிக்கையை, தி.மு.க.,விடம் கூறியுள்ளோம். ஒதுக்கக்கூடிய எண்ணிக்கையை, அவர்களும் எங்களிடம் தெரிவித்தனர். நாளை நடக்கக்கூடிய, மாநில செயற்குழுவில் முடிவு செய்வோம்,'' என்றார்.

அதைத் தொடர்ந்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, துணைப் பொதுச்செயலர் சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள், தி.மு.க., குழுவிடம் பேச்சு நடத்தினர். அப்போது, ம.தி.மு.க.,வுக்கு, திருச்சி, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய, மூன்று தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் வேண்டும் என, வைகோ வலியுறுத்தினார். ஆனால், தி.மு.க., தரப்பில், ஒரு ராஜ்யசபா பதவியும், ஒரு லோக்சபா தொகுதியும் ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு, வைகோ சம்மதம் தெரிவிக்கவில்லை. இரு தரப்பினர் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. 
நேராக, ஸ்டாலின் அறைக்கு சென்ற வைகோ, 'கூடுதலாக, ஒரு லோக்சபா தொகுதி ஒதுக்கி தந்தால் தான், ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவேன்' என்று கூறி விட்டு, பாதியில் வெளியேறினார்.

வெளியே வந்த, வைகோ, நிருபர்களிடம் கூறுகையில், ''தொகுதி பங்கீடு பேச்சு, சுமூகமாக நடந்து வருகிறது. ம.தி.மு.க., தரப்பில், தொகுதி பங்கீடு பேச்சு குழுவில் இடம் பெற்றிருந்தவர்களால், சென்னைக்கு வர இயலவில்லை. அதனால், இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. நாளை இறுதி செய்யப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...