Wednesday, March 6, 2019

" கலாபவன் மணி "

அவரது சிரித்த முகமும்,
கலகலப்பான நடிப்பும் தமிழ்சினிமாவின் வரலாற்று பக்கங்களில் ஒன்று.
எல்லோருக்கும் அவரை பிடித்திருந்தது..
எப்படிபட்ட நடிகன்?
முகத்தில் அத்தனை உணர்ச்சியும் குரலிலும் உடல் மொழியிலும்
அத்தனை ரசனையினையும் காட்டும் மகா கலைஞன்
நகைச்சுவையும் வில்லத்தனமும் அவனுக்கு எல்லா விதங்களிலும் வந்தது
மறுமலர்ச்சி எனும்
முதல்படத்தில்
டப்பிங் குரலில் அடையாளம் தெரியாவிட்டாலும்
நடிப்பில் கலக்கியிருந்தார்
தொடர்ந்து வந்த படங்கள் எல்லாம் அவரை கொண்டாட வைத்தன..
மிக சிறந்த நடிகர்கள் எல்லாம் அல்பாயிசில் மறைவதும்,
சாக வேண்டியவர்கள் நீண்ட காலம் இருந்து சினிமாவினையும், அரசியலையும் கெடுப்பது
இங்கு சாபக்கேடு
தியாகராஜ பாகவதர்,
கண்ணதாசன் ,
சந்திரபாபு,
சாவித்திரி,
நா.முத்துகுமார்,
சுருளிராஜன் போல மது அரக்கன் பறித்துகொண்ட பொக்கிஷம் கலாபவன் மணி
நாசருக்கும், பிரகாஷ்ராஜுக்கும் பின் மாபெரும் நடிகனாக உருவெடுப்பான் என எதிர்பார்த்தபொழுதுதான்
மரணம் அவனை கொண்டு போயிற்று
மதுபழக்கமே அவரின் மிக இளவயது சாவுக்கு முதல் காரணம்
அந்த மகா கலைஞனின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி.
மறக்க முடியாத நடிகன் அந்த மணி..
கலாபவன் மணி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...