Wednesday, March 6, 2019

சுண்டக்காயை தேடும் அ.தி.மு.க., பரிதாபம்!

ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க.,வில் வலிமையான தலைவர்கள் கிடையாது. அவர் இருந்தபோது, 2014 லோக்சபா தேர்தலிலும், 2016 சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., தனித்து நின்று, மாபெரும் வெற்றி பெற்றது. எந்த கட்சியையும் நம்ப மாட்டார்; தனியே களம் இறங்கி, அ.தி.மு.க.,வை, தேசிய அளவில் வலுமையான கட்சியாக்கினார், ஜெயலலிதா. ஆனால், இன்று, நிலைமை தலைகீழாகி விட்டது.வெறும், 4 சதவீத ஓட்டு வங்கி வைத்துள்ள கட்சிகளை, கூட்டணிக்காக தேடும் நிலைக்கு, அ.தி.மு.க., தள்ளப்பட்டுள்ளது.வடமாவட்டங்களில் வெற்றி பெற, பா.ம.க.,வை வளைக்க, தி.மு.க., - அ.தி.மு.க., துாண்டில் போட்டன. ஏழு லோக்சபா சீட், ஒரு ராஜ்யசபா சீட்டை தாரை வார்த்து, பா.ம.க.,வை தன் பக்கம் இழுத்து கொண்டது, அ.தி.மு.க.,'தமிழகத்தை முன்னேற்றம் அடைய செய்வது தான், எங்கள் லட்சியம். அதற்கான, ௧௦ கோரிக்கைகளை முன்னிறுத்தி, அ.தி.மு.க., கூட்டணிக்கு, பா.ம.க., ஒத்துக் கொண்டுள்ளது' என, சாதுர்யமாக பேசுகிறார், அக்கட்சியின் இளைஞரணி தலைவர், அன்புமணி!லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், ஒரு ராஜ்ய சபா, எம்.பி., சீட்டை இப்போதே, தன் கைக்குள் வாங்கிய, சமயோசித மருத்துவர், ராமதாசை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது.அடுத்ததாக, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தை வீடு தேடி சென்று, பேச்சு நடத்தியுள்ளார், துணை முதல்வரும், அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளருமான, பன்னீர்செல்வம்; இது, அக்கட்சியின் வலுவின்மையை காட்டுகிறது. கட்டெறும்பாக தேய்ந்து போன, தே.மு.தி.க.,விற்கு ஓட்டு வங்கி இல்லை. உடல்நலம் குன்றியுள்ள, விஜயகாந்தை நலம் விசாரிக்க சென்றனர், தி.மு.க., தலைவர், ஸ்டாலின், நடிகர், ரஜினிகாந்த் போன்றோர்.அது மாதிரி, பன்னீர்செல்வம் சென்று, 'உடல்நலம் மட்டும் விசாரிக்க வந்தேன்' என்றால், கட்சிக்கும், அவருக்கும் பெருமை. ஆனால், 'கூட்டணி பேச வந்தேன்' என, நிருபர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். வீடு தேடி போய், சுண்டக்காய் கட்சியெல்லாம் கூட்டணிக்கு அழைக்கும் அளவிற்கு, அ.தி.மு.க.,விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இரும்புக்கோட்டையான, அ.தி.மு.க.,விற்கு வந்த நிலையை நினைத்தால், பரிதாபமாக உள்ளது!lll

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...