Tuesday, March 12, 2019

யோகியின் செயல்பாடு. இரண்டு உதாரணங்கள்.

ஒன்று, டாக்சி ட்ரைவர் சொன்னது. முன்பெல்லாம் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு செல்வோம். மறுநாள் காலை, நான்கு டயர்களும் கழற்றப்பட்டு இருக்கும். போலீசில் சொன்னாலும் பயனில்லை. இது போல மூன்று முறை இழந்துவிட்டேன். இப்போதெல்லாம் அது நடப்பதே இல்லை.
இரண்டாவது, வீட்டுக்கு சிலிண்டர் எடை குறைவாக வருகிறது என்று புகார் தெரிவித்தேன். சில மணி நேரத்தில் சிலிண்டரை எடுத்துக்கொண்டு மாற்று சிலிண்டர் தர அந்த நிறுவன முதலாளி நேரே வந்துவிட்டார். அத்தோடு புகாரை வாபஸ் பெறுமாறு மன்றாட துவங்கினார். எக்காரணம் கொண்டும் இது நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்று கெஞ்சினார். வேறு சிலிண்டர் தரவேண்டியதுதானே, எதற்கு புகாரை வாபஸ் பெற சொல்கிறீர்கள் என்றபோது, எடை குறைந்ததால் கடைக்கு சீல் வைக்கிறார்கள் என்று கெஞ்சியுள்ளார்.
Image may contain: 1 person, smiling, closeup
ஒரு நிர்வாகம் சிறப்பாக நடக்கிறது என்றால், அதில் உள்ள தீயவர்கள் அஞ்சி நடுங்கி வாழ வேண்டும். நல்லவர்கள் நிம்மதியாக இருக்கவேண்டும். மாறாக இருந்தால், அந்த நாடு வாழ தகுதியற்றது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். ஏகச்சக்ரா நகரத்தில் பாண்டவர்கள் மாறுவேடத்தில் தங்குகிறார்கள். பீமன் தாங்கள் தங்கியிருந்த பிராமணரை தடுத்து தானே பகாசுரனுக்கு உணவு எடுத்து செல்கிறேன் என்றான். பகாசுரனை கொன்ற பின், பீமன் சொன்ன வார்த்தைகளே மேலே சொன்னது. மக்கள் தாங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று அவர்கள் தீர்மானிக்கவேண்டும். ஒரு ராக்ஷஸனை பலர் சேர்ந்து அழித்திருக்கலாம். ஆனால், நீங்கள் செய்யவில்லை. இன்றைய சாவு என் வீட்டில் இல்லை என்றும், என் வீட்டில் ஒருவர் இறந்தார். அடுத்து அவர்கள் வீட்டில் யாராவது சாகட்டும் என்று எண்ணி அமைதியாக இருந்தீர்கள். உங்கள் மன்னனும் உங்களை பாதுகாக்கவில்லை. ஒரு நாடு வாழ தகுதியானதாக இருக்கிறது என்றால், அந்த நாட்டில் உள்ள மன்னன் பண்பாடு, பாதுகாப்பு, நீர், பசு போன்றவற்றை பாதுகாக்கக்கூடியவராக இருக்கவேண்டும். இல்லையேல், நீங்கள் அந்த ஊரை விட்டு காலி செய்து வேறு ஊருக்கு போய்விடவேண்டும். இரண்டும் இல்லாமல், துன்பத்தை சகித்துக்கொண்டு வாழ்வது எப்படி சரியாகும் என்று கேட்டான். மக்கள் வெட்கினார்கள்.
தேர்தல் வருகிறது. நாம் நன்றாக இருக்கவேண்டும், நம் தலைமுறை நன்றாக இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கவேண்டும். என் கட்சி, என் ஜாதி, வாங்கிய காசுக்கு விசுவாசமாக என்றெல்லாம் சிந்தித்தால் விபச்சாரத்தை விட மோசமான சமுதாய துரோகம் செய்தவர்களாக ஆவோம். நாளை நம் வருங்கால தலைமுறை நம்மை வாழ்த்தவேண்டாம். ஆனால், உங்களுக்கு கிடைக்கவேண்டிய உபரி பணத்துக்காக எங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டீர்களே என்று சொல்லவே கூடாது.
ஒன்று வாக்களித்தே ஆகவேண்டும் அனைவரும்.
இரண்டு இரண்டு கூட்டணிகளில் பரவயில்லை ரகமான அதிமுக, பாஜக கூட்டணிக்கே வாக்கப்போம்.
மூன்றாவது எக்காரணம் கொண்டும் திமுக கூட்டணி வெல்லவே கூடாது என்பதை நினைவில் கொள்வோம்.
FUTURE GENERATION NEEDN'T THANK US.
BUT THEY SHOULDN'T CURSE.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...