🌲 ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து பார்வை செய்தாலும், குருவின் சாரத்தில் சனியும் - சனியின் சாரத்தில் குருவும் இருந்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் அது பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். இந்த தோஷமானது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் வரும்.
பிரம்மஹத்தி தோஷம் எதனால் வருகிறது?
🌲 பிரம்மன் படைத்த ஒரு உயிரைக் கொல்வதால்தான் இந்த பிரம்மஹத்தி தோஷமானது ஏற்படுகிறது.
🌲 நல்ல பாம்பைக் கொன்றுவிட்டாலும் இந்த தோஷம் ஏற்படும்.
🌲 சென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல் போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படும்.
🌲 ஏதேனும் ஒரு பொருளிற்கோ, பொன்னிற்கோ ஆசைப்பட்டு ஒரு உயிரை வதம் செய்தால் இந்த தோஷமானது பற்றிக் கொள்ளும். பெற்றோர்களை கவனிக்காமல் தனியாக விட்டுவிட்டாலும் இந்த தோஷம் ஏற்படும். இந்த பாவமானது நமது தலைமுறைகளையும் தொடரும்.
பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?
🌲 பிரம்மஹத்தி தோஷம் உடைய ஜாதகர்கள் வாழ்வில் நிம்மதி இருக்காது. தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள் அவர்களை துன்புறுத்தும்.
🌲 இந்த தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமண தடை ஏற்படும்.
🌲 கல்வி, வேலை மற்றும் குழந்தைபேறு இவற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும். கடன் அதிக அளவில் ஏற்படும். அதிக அளவில் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது.
🌲 நல்லறிவு, நல்ல பழக்கங்கள், நல்ல உழைப்பு போன்றவை இருக்கும். ஆனால் தகுந்த பலன்கள் கிடைக்காது.
பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட கடவுள்கள் :
🌲 பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
🌲 சப்தகன்னியர் - மகிஷாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
🌲 இராமர் - இராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
🌲 வீரசேனன், வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment