Saturday, March 16, 2019

ஐதராபாத்தில் நடைபெற்ற விஷால் திருமண நிச்சயதார்த்தம் - நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்பு.


















நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார். பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உள்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர்.


விஷாலும், அனிஷாவும் சில மாதங்களாக காதலித்து வந்தனர். இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்தனர். விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் தனியார் சொகுசு ஓட்டலில் பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...