Saturday, March 16, 2019

இந்த 7 உணவுகளை சாப்பிட்டால் நுரையீரல்ல சளி சேர்ந்துக்கிட்டே இருக்கும்!

காலையில எழுந்ததுமே வர கூடிய முதல் பிரச்சினை சளி தொல்லையாக தான் இருக்கும். முன்பெல்லாம் குளிர் காலத்துல மட்டும் தான் இந்த சளி தொல்லை இருக்கும். ஆனால், இப்போது எல்லா காலங்களிலும் சளி தொல்லை படாதபாடு படுத்துகிறது. பொதுவாக ஐஸ் கிரீம், கூல் டிரிங்க்ஸ் போன்ற குளிர்ந்த உணவு பொருட்களை சாப்பிடும் போது தான் சளி பிடிக்கும்.
இது முற்றிலுமாக மாறுபட்டு எல்லாவித உணவுகளாலும் சளி தொல்லை நம்மை மோசமான நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது. சளி தொல்லைக்கு முடிவே இல்லையா என்று கதறும் பலருக்கும் தீர்வு இருக்கிறது. அதற்கு நீங்கள் சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
காரணம், இந்த வகை உணவு பொருட்கள் தான் உங்களின் நுரையீரலில் சளியை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இது படிப்படியாக உடல் முழுக்க பரவி மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. எந்தெந்த உணவுகள் சளி தொல்லையை உருவாக்குகின்றன என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
சளி
நாம் நினைப்பது போன்று உடலில் ஒரு சில இடங்களில் மட்டுமே சளி இருப்பதில்லை. தொண்டை, மூக்கு, நெஞ்சு, நுரையீரல், வயிற்று பகுதி என பல்வேறு உறுப்புகளில் சளி ஊடுறுவும் தன்மை கொண்டது. சளி தொல்லையை போக்க முதலில் அவை உருவாகும் காரணிகளை முடக்க வேண்டும். இல்லையேல் உயிருக்கே ஆபத்தான நிலையை இது ஏற்படுத்தி விடும்.
வறுத்த, பொரித்த உணவுகள்
காலையிலும் மாலையிலும் ஸ்னாக்காக நாம் சாப்பிட கூடிய இந்த வகை வறுத்த மற்றும் பொரித்த வகை உணவுகள் தான் நமக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும்.
சளி தொல்லை கொண்டோர் இந்த வகை உணவுகளை தவிர்த்தாலே சளி குறையும். இல்லையேல் ஆஸ்துமா போன்ற மோசமான நிலையை உண்டாக்கும்.
பால் பொருட்கள்
சளியை உற்பத்தி செய்வதில் பால், தயிர், சீஸ், வெண்ணெய் போன்ற உணவுகளும் முதன்மையான இடத்தில் உள்ளது. இவை அரைகுறையாக செரிமானம் அடைந்து சளியை உற்பத்தி செய்து உடல் முழுக்க பரப்பி விடும். ஆதலால், உங்களுக்கு சளி தொல்லை இருக்கும் போது பால் பொருட்களை தவிர்த்து விடுங்கள்.
இறைச்சி
இறைச்சியில் ஹிஸ்டமைன் என்கிற மூல பொருள் உள்ளது. இதை சாப்பிடுவதால் நேரடியாக உங்களின் உடலில் சளி பெருக தொடங்கும்.
மேலும், கொஞ்சம் கொஞ்சமாக இவற்றின் பாதிப்பு உயர்ந்து, பின் சுவாசிக்க முடியாத அளவில் இதன் தாக்கம் இருக்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
க்ளுட்டன் உணவுகள்
அதிக அளவில் க்ளுட்டன் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலே சளி உருவாவதை தடுத்து விடலாம். கோதுமை போன்றவற்றில் க்ளுட்டன் அதிக அளவில் நிரம்பி உள்ளதால் அவை எளிதில் சளியை உற்பத்தி செய்யும். எனவே, இதனை அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
சோயா
சோயா சார்ந்த பொருட்களினால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். அதில் குறிப்பிட வேண்டியது சளி தொல்லை தான். நுரையீரலில் சளியை உற்பத்தி செய்வதற்கு சோயா பொருட்களும் ஒரு காரணம். மேலும் இதனால் தொண்டை பகுதியில் சளி ஒட்டி கொண்டு உணவு உட்கொள்ளும் போது பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்.
காபி
காபியில் உள்ள கஃபைன் என்கிற மூல பொருளும் அதில் சேர்க்கப்படும் சர்க்கரையுமே சளியை உற்பத்தி செய்ய முக்கிய காரணியாக உள்ளது. மேலும், ரிப்ளக்ஸ் என்கிற அமிலத்தையும் இவை அதிகரித்து தொண்டை, மூக்கு போன்ற இடங்களில் அதிக சளியை ஏற்படுத்தி விடும்.
சளியை விரட்டி அடிக்க
இது போன்ற உணவு பொருட்களால் உற்பத்தி ஆகியுள்ள சளியை 2 மணி நேரத்திலே விரட்டி அடிக்க 4 உணவு பொருட்கள் இருந்தால் போதும்.
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
தேன் 1 ஸ்பூன்
ஆப்பிள் சீடர் வினிகர் 1 ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை கொதிக்க விட்டு அதில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து கொள்ளவும். நன்றாக கொதித்த பின்னர் இதை இறக்கி கொண்டு ஆற விடவும். பிறகு இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி குளிர் சாதன பெட்டியில் வைத்து விடுங்கள்.
எப்போது?
உங்களுக்கு சளி தொல்லை ஏற்படும் போது இதனை 1 ஸ்பூன் அளவு எடுத்து கொண்டு மேலும் தேன், ஆப்பிள் சிடர் வினிகர், மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை நீங்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...