Thursday, March 14, 2019

ஆஹா என்ன அருமையான நேர் காணல். உண்மையை அப்படியே புட்டு புட்டு வைத்தாகிவிட்டது.

உங்க பேர்
கதிர் ஆனந்த்
அப்பா பேர்
துரைமுருகன்
அது என்ன
கதிர் ஆனந்த்
நல்ல தமிழ் பேரா வச்சிருக்கலாமே?
உங்க அப்பா
ஸ்டாலின் ன்னு உங்களுக்கு
பேர் வச்சு,
தமிழ் வளர்த்தா மாதிரி
எங்கப்பாவும்,
கதிர் ஆனந்த் ன்னு பேர் வச்சு
தமிழை தாறுமாறா
வளர்த்திருக்காங்க, ஸார்.
சரி சரி அதுபோகட்டும்,
உங்க ஊர் எது?
டெட்பாடி
என்னாது டெட்பாடி யா?
மன்னிக்கனும்,
காட்பாடி.
உங்க எதிரிலே இருந்தாவே
உங்களுடைய சிறப்பம்சமும்
கொஞ்சம் சிதறி வந்து
சிந்தனையிலே ஒட்டிக்கிது.
எந்த தொகுதிய கேட்கறீங்க?
வேலூர் தொகுதியிலே
நிக்கலாம் ன்னு
ஆசைப்படுறேன்.
வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
பிரமாதமா இருக்குங்க,
ஆனாலும்
ஒரு பயம் இருக்குங்க?
அதான் வெற்றி வாய்ப்பு பிரமாதமா இருக்குங்கறீங்க,
அப்புறம் என்ன பயம்?
அதுதாங்க பயமே.
எங்க தொகுதி மக்கள்
என்மீதும் எனது அப்பா மீதும்
வச்சிருக்குற அளவற்ற அன்பாலே
தொகுதியில இருக்குற
மொத்த ஓட்டுக்களை விடவும்
ரெண்டு மூணு லட்சம் கூடப் போட்டு
சங்கடப் படுத்திடக்கூடாது, பாருங்க,
அதான்.
எவ்வளவு செலவு செய்வீங்க?
ஏதோ எங்கப்பா
தமிழ் நாட்டளவில தாங்க
மந்திரியா இருந்தாரு.
எவ்வளவு தான் தண்ணி தாராளமா வந்தாலும்,
குடத்துல எடுத்து ஊத்துனா
எத்தனை தொட்டியைத்தான்
நெறப்ப முடியும்?
ஆறுமாசமோ
ஒரு வருஷமோ மத்திய மந்திரியா இருந்திருந்தா,
பூமிக்கடியில கேபிள் போட்ட மாதிரி
நேரா பைப் லைன் போட்டு
பல தொட்டி என்ன
காட்பாடியிலே ஒரு கடலையே
உண்டாக்கியிருப்பாரு,
இல்லே,
ஸ்பெக்ட்ரம்லே
மொத்த அலைவரிசையிலயும்
கைவரிசையை காட்டி
வேலூரச் சுத்தி
தங்கத்தாலயே வேலிபோட்டு
வைரத்தையும்
மரகதத்தையும் வெள்ளாம பன்னியிருப்போம்.
ஆமா,
அது யாரு மரகதம்?
அது நீங்க நெனைக்கிற மாதிரி
பொண்ணு இல்லீங்க,
அது ஒரு பொன்,
அவ்வளவு தான்.
பொண்ணு ன்னா
பெரிய பொண்ணு,
பொன் ன்னா
சின்னப் பொன் னா?
துரைமுருகன் :
ம்ம்ம்,
இது வேட்பாளருக்கான நேர்காணல்.
இந்த ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க,
அடுத்த தேர்தல்லே
மொத்த செலவையும்
நானே ஏத்துக்கறேன்.
சரி சரி
உங்க சாதி ஓட்டு எவ்வளவு தேறும்.
என்னங்க இப்படி கேட்டுட்டீங்க,
நான் ஒரு தொகுயில நின்னா போதும்,
எங்க பக்கத்து தொகுதி சாதி சனமெல்லாம் வந்து எனக்குத்தான் ஓட்டு போடுவேன் ன்னு வந்து அடம் பிடிப்பாங்கன்னா பாத்துக்கோங்களேன்.
உங்களுக்குதான் பல கல்லூரிகள் இருக்கே,
அதை கவனிச்சாவே போதுமே,
எதுக்காக எம்பி ஆகனும் ன்னு ஆசைப்படறீங்க?
ஏங்க,
சாப்பாடு வேணும் ன்னு தான் கேட்போம்,
அதுக்காக வெறும் சாப்பாடா போடுவாங்க,
சாம்பார் ரசம் கூட்டு பொரியல் ன்னு சேர்ந்தது தானேங்க சாப்பாடு.
எம்பி ன்னா,
எம்பி மட்டும்மா கணக்கு?
எம்பி ஆயாச்சுன்னா
மந்திரி பதவி எவ்வளவு உயரத்துல இருந்தாலும்
எப்படியாவது
எம்பி
எம்பி
குதிச்சு
மந்திரி பதவிய புடிச்சிடலாமே.
எம்பி யாகி
மந்திரியும் ஆகிட்டா
உங்க லட்சியம் என்ன?
வேற என்னங்க பெரிய லட்சியம்,
ரொம்ப வெல்லாம் ஆசை கெடையாதுங்க,
ஏதோ எங்கப்பா பொதுப்பணித்துறை மந்திரியா இருந்து,
வெறும் இன்ஜினியரிங் காலேஜா கட்டி வச்சிட்டாரு,
நான் மத்திய அமைச்சராக ஆயிட்டா,
சின்னதா ஒரு நாலஞ்சு
மெடிக்கல் காலேஜ் கட்டனும்.
சரி,
ஏதாவது ஒரு திருக்குறள் சொல்லுங்க பாப்போம்.
தகரம் ப்ளாஸ்டிக் டப்பா வெல்லாம்
காயலான் கடைக்கே சொந்தம்,,
அருமை அருமை அருமை
யூ ஆர் மெல்ட்டேடு
என்னாது???
இல்லே இல்லே
யூ ஆர் செலக்ட்டேடு.
துரைமுருகன் :
என்னாப்பா
ஒரு குட்டித் தூக்கம் போட்டேன்
அதுக்குள்ளே
நேர்காணலையே முடிச்சிட்டீங்களா?
வெளியே நிருபர்கள் :
துரைமுருகனிடம்,
பொள்ளாச்சி சம்பவம் பற்றி,
ஆஆங்ங்,
பொள்ளாச்சி யாவது
புள்ளத்தாச்சி யாவது,
போங்கப்பா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...