Friday, March 8, 2019

வாஜ்பாய் ஜி சொல்லாத உண்மை :

பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் துவக்க காலத்தில் ஓர் எளிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தன் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மையை சொல்லாமல் மறைத்துவிட்டார். அதைவிட வரலாற்றில் அது குறித்து பேசப்படவேயில்லை என்பது உண்மை.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் இன்றைய உறுப்பினர்களுக்கு இது தெரியாது என்பது உண்மையிலும் உண்மை. அது என்ன உண்மை???
 தென்சென்னை மாவட்ட பாஜக அலுவலகத்தில் ““பொங்கல் விழா”- “உறியடி”ப் போட்டி ஆகியன உற்சாகமாக அரங்கேறின. அப்போது, தொகுதித் தலைவர் திரு.குட்டிகணேசன் ஜி, மகளிரணி ஜெஸி முரளிதரன், வாஜ்பாய் சேவை மையம் நிறுவனர் டாக்டர். திரு.முருகமணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றி முடித்தனர்.
அப்போது ஒருவர் டாக்டர். திரு.முருகமணி அவர்களிடம் தான் ”வாஜ்பாய் அவர்களின் வாழ்க்கை சம்பவம் ஒன்றைக் கூறுகிறேன்” எனக் கேட்டார். ”விழா முடிந்துவிட்டது. அவ்வளவுதான்” என எவருமே ஈகோ காட்டவில்லை.
வாஜ்பாய் அவர்களைப் பற்றி பேச விழைந்தவர் பேசத்தொடங்கினார். அவர் சொல்லச் சொல்ல மனம் விக்கித்துப் போனது. கண்களின் ஓரம் ஈரம் கசிந்தது. அப்படி என்னதான் அவர் கூறினார்? இதோ:
பிரதமராவதற்கும் முன்னர், பாஜக வளரும் பருவத்தில் இருந்தபோது, வாஜ்பாய் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியபோது, அவரை ஒரு இஸ்லாமியப் பெண் தன் மகளுடன் வந்து சந்தித்தார். தனது மகளுக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாகவும், மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால், மிகுந்த செலவாகுமென்பதால், அதற்கு தங்களால் ஏதேனும் உதவி செய்ய முடியுமா? என ஆதங்கத்தோடு வினவியிருக்கிறார்.
உடனே வாஜ்பாய் அவர்கள் தானே தன் சிறுநீரகத்தைத் தர முன்வந்துள்ளார். அப்போது அரசாங்கத்தின் அதிகாரி, “அய்யா…. அதற்கெல்லாம் மிகப்பெரிய நடைமுறை உள்ளதே. எனவே தங்களால் அது இயலாது.” என மறுதலித்திருக்கிறார். அதற்கு வாஜ்பாய் அவர்களோ, சற்று உறுதியான குரலில், “அதையெல்லாம் நான் பார்த்துகொள்கிறேன். முதலில் என் சிறுநீரகம் பொருந்துமா? என மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள்” எனக்கூறியுள்ளார்.
அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்ன ஆச்சரியம்!!! வாஜ்பாய் அவர்களின் சிறுநீரகம் ஏகக்கச்சிதமாக பொருந்தும் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. உடனே நாள் குறிக்கப்பட்டது. தான் வாக்களித்தபடியே வாஜ்பாய் அவர்கள் தனது சிறுநீரகத்தை அந்த இஸ்லாமியப்பெண்ணுக்கு தானமாக அளித்துள்ளார். அப்பெண்ணும் உடல்நலம் தேறியுள்ளார். இது அத்தோடு முடிந்து, மறந்து போயிற்று.
பின்னாளில் ஒரு ஆஸ்பத்திரிவிழாவின் போது, வாஜ்பாய் அவர்கள் முன்னிலையில் ”சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை” செய்த மருத்துவர் திடீரென இதனை தனது பேச்சினூடே குறிப்பிட்டுள்ளார்.
அப்போதுதான் பெரும்பாலானவர்களுக்கு இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
ஆனால், தன் வாழ்நாளின் இறுதிவரை ஒற்றைச் சிறுநீரகத்துடன் மட்டுமே வாழ்ந்த வாஜ்பாய் அவர்கள் தனது வாயாலோ, தனது எழுத்தாலோ இதனை தெரிவித்ததில்லை.”
இப்போது சொல்லுங்கள்…. நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும். சொத்துக்களை அடைவதற்காக பெற்றத் தாயைக்கூட கொல்லத்துணிகிற,
கோடிகோடியாய் கொள்ளையடித்து ஊடகங்களை பணத்தால் அடித்து கையகப்படுத்துகிற,
பதவிக்கு வருவதற்காக எவ்வளவு கீழான நிலைக்கும் இறங்கத்தயாராக இருக்கிற, ஒருவனுக்கு ஒரு இட்லி கொடுத்தாலே இன்றைய சமூகத்தில், ஃப்ளக்ஸ் வைத்து ஃபோட்டோ காட்டும் இன்றைய அரசியல் வா(வியா)திகளுக்கு மத்தியில்,
இப்படியும் ஒரு மகத்தானவராக வாழ்ந்திருக்கிறார் வாஜ்பாய் அவர்கள்.
”தன்னையே கொடுப்பான்” எனும் அடைமொழி இவருக்கல்லவா பொருந்தும்?
வீதிக்கொரு மனைவி, மைதானம் நிரம்பும் அளவு வாரிசுகள், தான் கொள்ளை அடிக்க தொண்டர்களை அடிமுட்டாளாக பொய்யைப் பரப்பும் தலைமை,
”மக்களால் நான்… மக்களுக்காக நான்…” என முழக்கமிட்டோரும் தன் பெயரில் கோடிகளைச் சேர்த்து, தனது ”வேலைக்காரிக் குடும்பத்தை”யும் குபேரர்களுக்கு இணையாக வாழ்வித்த தாயுள்ளம்(?) கொண்ட தலைமை,
தாங்கள் வாங்கும் கூலிகளுக்காக, தன் இனத்தை, தன் கலாச்சாரத்தை, தன் தன்மானத்தை அடமானம் வைக்கும் தலைமைகள் பல இருக்கும் இந்த தேசத்தில்தான் வாஜ்பாய் போன்றவர்களும் வாழ்ந் தேசத்தில்தான் வாஜ்பாய் போன்றவர்களும் வாழ்ந்திருக்கிறார்!
இவரைப் போன்றோரின் வாழ்க்கை வரலாறு கூட வேண்டாம், இதுபோன்ற சம்பவங்களாவது பள்ளி கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம் பெற்றதுண்டா?
இன்னும் சொல்லொண்ணா வேதனைகளைத் தந்து பாரதத்தினை படுகுழியில் தள்ளியது.
இஸ்லாமியக் குடும்பம் என பாராமல் தன் உடலின் உறுப்பினை அளித்த வாஜ்பாய்ஜி அவர்களை மதவாதி என முத்திரை குத்தியது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...