Friday, March 8, 2019

திருச்சி தொகுதியில் சபரீசன் போட்டி?

திருச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் மருமகன், சபரீசன் போட்டியிட உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் லோக்சபா தேர்தலில், 20 தொகுதிகளில், தி.மு.க.,வும், மீதி, 20 தொகுதிகளில், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதில், திருச்சி தொகுதிக்கு, கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. தி.மு.க., அணியில், 10 தொகுதிகளில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சி விரும்பும் தொகுதிகளில், திருச்சியும் உள்ளது.
ஆனால், அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க, தி.மு.க., விரும்பவில்லை. அது, தி.மு.க., சுலபமாக வெற்றி பெறும் தொகுதி என, அக்கட்சி மேலிடம் கருதுகிறது.எனவே, அத்தொகுதியை, சபரீசனுக்கு ஒதுக்க வேண்டும் என, ஸ்டாலின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். 
சபரீசன் போட்டியிட்டால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து, திருச்சி மாவட்ட செயலர், கே.என்.நேருவிடம், ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.எனவே, திருச்சி தொகுதியில், சபரீசன் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 திருச்சி தொகுதியில்   சபரீசன் போட்டி?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...