Tuesday, March 12, 2019

இதுக்குபேர்தான் கலிகாலம்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச்சனையில் தேசிய ஊடகங்கள் ஊரகப் பகுதிகளை புறக்கணிப்பதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஐயா ரொம்ப வருத்தம் தெரிவித்து இருக்கீங்க நீதிபதி அவர்களே உங்க பொண்ணோ?, உங்க பொண்டாட்டியோ இந்த பிரச்சனையில் மாட்டி இருந்த இதே நிலைப்பாட்டிலேயே இதே மாதிரி கருத்து சொல்லி இருப்பீர்களோ?
இது போன்ற குற்றங்களுக்கு காரணமே குற்றவாளிக்கு சரியான தண்டனை கொடுப்பது இல்லை என்பதுதான். சென்ற வாரம் ஒரு பைக் திருடன் ஒரு புதிய ஷோரூம் உள்ள ஒரு புது வண்டி எடுத்துட்டு போறான் அவன் யார் என்றால் இதுவரைக்கும் 30 கார் திருடிட்டு 20க்கும் மேற்பட்ட பைக் திருடியவணாம்.
நிர்மலா தேவி அவர்களுக்கு ஜாமீன் கொடுக்க 11 மாதங்கள். இதே 11 மாதத்தில் இந்த வழக்கை விசாரித்து அவருக்கு தண்டனையும் கொடுத்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும்.
ராஜீவ் காந்தி மற்றும் 15 பேரை 28 ஆண்டுகளுக்கு முன் உடல் சிதற சின்னாபின்னமாக கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை, அதற்கு துணை நின்றவர்களை விடுவிக்க சொல்லி கேட்கிறார்கள். ஆனால் இந்த பசங்கள உடனே உடனே ரோட்ல நிக்க வச்சு தூக்குல போடணும் என்று தீர்ப்பு கேட்கிறார்கள் என்ன சொல்றது?
இதே ஆத்திரத்தை 1991ல் காட்டியிருந்தால் நியாயம். எந்தவொரு விஷயத்தையும் மக்கள் ஆத்திரப்பட தூண்டாமல் மக்களும் குறிப்பாக பெண்கள் விழிப்புணர்வு அடைய வழிவகை செய்யுங்கள்.
குற்றவாளிகள் உருவாக காரணமே ஊடகமும் நீதிமன்றமும் தான் என கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...