Monday, March 18, 2019

மனோகர் பாரிக்கர்..


Image may contain: 2 people, people sitting
ஐ.ஐ.டி முடித்த அதிபுத்திசாலியான மனோகர் பாரிக்கர் குறித்த வியக்கதகு செய்திகளில் ஒன்று..
இராணுவ மந்திரியாய் மனோகர் பாரிகர் அவர்கள் செயலாற்றிய போது நம் வீரர்களுக்காக ஒவ்வொன்றும் எழுபதாயிரம் ரூபாய் செலவில் இஸ்ரேலியர்களிடமிருந்து அனைத்து தளத்திலும் செயல்படும் சிறப்பு மிக்கதான அக்காலணிகள் தருவிக்கப்பட்டிருந்தன. விலை அதிகமென்பதால் அது இராணுவ தலைமை அதிகாரிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது.
அந்தச் சிறப்பான காலணிகள் அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கிடைக்க வேண்டுமென விரும்பினார் பாரிகர். யார் அதை உற்பத்தி செய்கிறார்கள் என தேடிய போது நம் இந்தியாவின் உத்திரபிரதேச தொழிற்சாலை ஒன்றில் அது தயாராகிறது என அவருக்கு தெரிய வந்தது. அதன் அடக்கவிலையோ இரண்டாயிரம் மட்டுமே. அதை தனக்காக உற்பத்தி செய்ய சொன்னபோது அதன் இஸ்லாமிய முதலாளிகள் மறுத்துவிட்டனர், இஸ்ரேல் தமக்கு உடனடி பணம் தருகிறது, அரசாங்க பணமென்றால் பல முதலைகள் வாயில் லஞ்சம் அளிக்க வேண்டும் அதன்பின்னும் பணம் வராது என திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
விடவில்லை நம் தேசபக்தர் மனோகர் பாரிகர். முதல் செக்கை அட்வான்ஸாக அனுப்பினார். பின் தன் தனிப்பட்ட தொலைபேசி எண்ணைக் கொடுத்து உங்களின் பணவரவில் எதேனும் குறை ஏற்பட நான் விடமாட்டேன், அப்படி ஏதேனும் இருந்தால் இதில் அழையுங்கள், அவர்களை வேலையை விட்டே தூக்கி விடுகிறேன் என உறுதிமொழி அளித்தார்.
காங்கிரஸின் பொருளாதார மேதைகள் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் எள்ளவும் செய்ய முடியாத மேஜிக்கை நிகழ்த்தினர் மோதியும், அவரது இராணுவ மந்திரி மனோகர் பாரிகரும்.. அந்த ஒரே ஒரு காலணி டெண்டரில் மட்டும் இரண்டு பில்லியன்கள் அமெரிக்க டாலர் (சுமார் பதினான்காயிரம் கோடிகள் ரூபாய்) நாட்டுக்கு மிச்சம். அந்த பணம் முழுக்க அப்படியே அதே உத்திரப்பிரதேச விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டது மானியமாய் ஜெய் ஜவான்.. ஜெய் கிசான் திட்டத்தில். (வாழ்க இராணுவம், வாழ்க விவசாயம்)
நாட்டுக்காகவே துடித்த உள்ளம்.. அதான் இன்று மறைந்த நம் மனோகர் பாரிகர். அவரின் இழப்பு நம் பாரத நாட்டுக்கு ஈடுகட்ட இயலாத ஒன்று.
மீண்டும் பிறக்கும் அந்த உயிர் தன் காதல் பாரத மண்ணிலே.
பாரத் மாதா கி ஜெய் 🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...