Sunday, March 10, 2019

அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க., நான்கு லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு.

நீண்ட இழுபறிக்கு பின், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்துள்ளது. தே.மு.தி.க.,விற்கு, நான்கு லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ம.க., - பா.ஜ., - புதிய நீதிக்கட்சி - புதிய தமிழகம் - என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை இணைந்தன. இக்கூட்டணியில், தே.மு.தி.க.,வும் இணைய விரும்பியது. ஆனால், அக்கட்சி அதிக இடங்களை கேட்டதாலும், தி.மு.க., உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாலும், கூட்டணி முடிவாகாமல் இழுபறி நீடித்தது.

கெடு:

இந்நிலையில், தி.மு.க., தன் கூட்டணியை இறுதி செய்து, தே.மு.தி.க.,விற்கு இடமில்லை என, அறிவித்தது. அதனால், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய, தே.மு.தி.க., முன் வந்தது. கூட்டணியில் இணைய, நேற்று வரை, தே.மு.தி.க.,விற்கு, அ.தி.மு.க., கெடு விதித்தது. இதையடுத்து, நேற்று இரவு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலர் சுதீஷ் ஆகியோர், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனியார் ஓட்டலுக்கு சென்றனர். முதல்வர், துணை முதல்வர் ஆகியோரும், அந்த ஓட்டலுக்கு வந்தனர்.


இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு நடந்தது. பேச்சின் முடிவில், கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அ.தி.மு.க., சார்பில், ஒருங்கிணைப்பாளர், பன்னீர், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோரும், தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்தும் கையெழுத்திட்டனர்.

முடிவு:

இது குறித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வும் - தே.மு.தி.க.,வும் கூட்டணி அமைத்து, தமிழகத்திலும், புதுச்சேரியிலும், தேர்தலை சந்திப்பது, என்ற நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு, நான்கு லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்படும்.


தமிழகத்தில், காலியாக உள்ள, 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, தே.மு.தி.க., தன் முழு ஆதரவை அளிக்கும். அ.தி.மு.க., மெகா கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை, முறைப்படி கலந்து பேசி அறிவிப்போம். த.மா.கா.,வுடன் கூடிய விரைவில், நல்ல முடிவு எட்டப்படும். எங்கள் கூட்டணி வலிமையான அணி. தே.மு.தி.க., - அ.தி.மு.க., எப்போதும், உணர்வுப்பூர்வமான கூட்டணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...