17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை
நாளை ( 07-03-2019) அல்லது நாளை மறுநாள் ( 08-03-2019)
வெளியாகலாம்
நாளை ( 07-03-2019) அல்லது நாளை மறுநாள் ( 08-03-2019)
வெளியாகலாம்
17வது நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
கூட்டணி அமைப்பது, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
நாடுமுழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. அரசியல் கட்சிகளும் இந்த கோணத்தில் தான் கூட்டணி அமைத்து வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 3 முறை வந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இன்று 6-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அவருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பேச இருக்கிறார்கள்.
இதில் கூட்டணியில் வந்துவிடுவார் எனும் நம்பிக்கையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கட்டவுட் வைக்கப்பட்டது..
இதில் கூட்டணியில் வந்துவிடுவார் எனும் நம்பிக்கையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கட்டவுட் வைக்கப்பட்டது..
ஆனால் தற்போது அந்த இடத்தில் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் கட்டவுட் வைக்கப்பட்டது.
இந்த மேடையின் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் படங்கள் கொண்ட பேனர் வைக்கப்பட்டது...
அது உடனடியாக அகற்றப்பட்டது...
அது உடனடியாக அகற்றப்பட்டது...
தொடர்ந்து நாடுமுழுவதும் பல்வேறு புதிய திட்டங்களை மோடி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.
இதுபோல் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இன்னும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு புதிய திட்டங்களை தொடங்க முடியாது. எனவே பிரதமரும், முதல்- அமைச்சரும் தொடர்ந்து புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்கள்.
இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி வருகிற 8-ந்தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெறுவதற்கான பட்டியலும் தயாராகி வருவருகிறது.
நாடுமுழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன.
எனவே தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறும் என்று தெரிகிறது. அடுத்து, தமிழ்நாட்டில் கோடைக்காலம் எனவே முதல் கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக தேர்தல் கமிஷனுக்கு சிபாரிசு செய்துள்ளது. எனவே முதல் கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும். இது ஒரே கட்டமாக நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 16வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அட்டவணை 05-03-2014 புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 24-04-2014 வியாழக்கிழமை நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 16-05-2014 வெள்ளிக்கிழமை
நடைபெற்றது.
நடைபெற்றது.
No comments:
Post a Comment