''விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் கோரிக்கைகள் எதுவும், மத்திய அரசின் காதுகளில் கேட்பதில்லை. அனில் அம்பானி, நிரவ் மோடி போன்றவர்கள் சொல்வதை மட்டுமே, இந்த அரசு கேட்கிறது,'' என, காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை, காங்., தலைவர் ராகுல், நேற்று துவக்கி வைத்தார்; அப்போது, மீனவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியை போல, நான் போலியான வாக்குறுதிகள் அளிக்க மாட்டேன். மத்தியில், காங்., ஆட்சிக்கு வந்தால், மீனவர்கள் நலனுக்காக, மத்திய அமைச்சரவையில் தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.
இன்றைய சூழலில், அனில் அம்பானி, நிரவ் மோடி போன்றவர்கள், பிரதமரிடம் எது சொல்ல விரும்பினாலும், 10 வினாடிகளில் அவர்களால் சொல்லிவிட முடிகிறது. இதற்காக அவர்கள், சத்தம் போட்டு குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இருப்பதில்லை.அவர்கள், மெதுவான குரலில் சொன்னால் கூட, அது அரசை சென்றடைகிறது.

ஆனால், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பெரும் குரலெழுப்பி கூச்சலிட்டாலும், அவர்களது கோரிக்கைகள், அரசின் காதுகளில் கேட்பதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment