திமுக என்ற கட்சியின் பட்டத்து இளவரசர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எங்கே எந்த நேரத்தில் விவாதம் மக்கள் முன் அழைத்தாலும் காத்திருக்கிறேன். 2006-2011 வரை மட்டும் திருவாளர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த அயோக்கியத்தனத்தினை மாத விவரங்களுடன் 100% அசைக்க முடியாத ஆதாரங்களுடன் பேச நான் தயார்.
எனவே உதய நிதி அடிப்பொடிகள் , சுயமரியாதை என்றால் என்ன என்று கூட தெரியாத ஒரு குடும்பத்தின் அடிமை உடன் பிறப்புகள் எவருக்கும் நான் தனித் தனியே பதில் கொடுக்க விரும்பவில்லை. நான் இப்போதும் கூறுகிறேன் லாட்டரி மார்டீன் -விவகாரத்தை எடுத்துப் பேசினால் மொத்த சென்னையும் காறித் துப்பும் அளவிற்கு நான் ஆதாரங்களை மக்கள் முன் வைத்து விவாதம் செய்யத் தயார்.
வேண்டும் என்றால் உங்கள் அடிமை ஊடகங்களையும் அழைத்து வாருங்கள் ஒரு பொது மேடையில் சந்திக்கலாம்.
எனவே இந்த அவனே இவனே என்ற பேச்செல்லாம் வேண்டாம். உங்கள் கம்பெனி ஓனர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் சொல்லுங்கள் எங்கே எப்போது வேண்டுமானாலும் பொது மக்கள் மத்தியில் விவாதம் நடத்த மாரிதாஸ் தயார்.
20 , 30 மீம்ஸ் தயாரிக்கும் ஆட்களை வைத்துக் கொண்டு - 10 , 20 பக்கங்களை மறைமுகமாக நடத்திக் கொண்டு - அவர்களை வைத்து அவதூறாகப் பதிவுகள் போடுவதெல்லாம் சரி உங்கள் சந்தோசத்திற்குச் செய்து கொள்ளுங்கள் அதற்கு முன் வாருங்கள் உதய நிதி ஸ்டாலின் அவர்களே. இல்லை திமுக அதிகாரப் பூர்வமாக எந்த நபரை விவாதம் செய்ய முன் வைத்தாலும் சரி நான் தயார். உதய நிதிக்குப் பதிலாக அவர் என்னோடு விவாதம் செய்ய வரவேண்டும்.
நான் தமிழ் அது இது என்று எல்லாம் பேச விரும்பவில்லை நிர்வாகம் என்ன செய்தார்கள் என்ன கொள்ளை அடித்தார்கள் என்று பேச விரும்புகிறேன். சரியா? எனவே வரும்போது உங்கள் பினாமி விசயங்களையும் எடுத்து வைத்து கொண்டு விவாதம் வரவும்.
விவாதத்தின் தலைப்பு இப்படி வைத்து கொள்ளலாம்
1.காமராஜர் படிக்க வைத்தார் - கருணாநிதி குடிக்க வைத்தார்.
தலைப்பு பிடிக்கவில்லை என்றால்
2.ஏரி திருடன் எங்கே?
இந்த தலைப்பு இலக்கியம் போல இருக்கா. வேண்டுமானால் உங்கள் உலக வியாக்கிதம் பேசும் கம்யுனிஸ்ட் கட்சியினரை வைத்து கொள்வோம் நடுவராக. வெக்கம் கெட்ட கம்யுனிஸ்ட் கட்டாயம் முட்டுகொடுக்க வருவர். குழப்பமாக இருந்தால் "நீதாண்டா லூசு" புகழ் அருணன் அவர்களை அழைத்து கொண்டு வரவும்.
இல்லை என்றால் கடைசி வரை மீம்ஸ் போட்டுகிட்டே இருங்க.
No comments:
Post a Comment