பல படங்களில் தனது நடிப்பின் பரிணாமத்தை சலிக்க சலிக்க காட்டிவிட்டவர் சிவாஜி.... என்னை பொறுத்தவரை அவர் நடித்த பாசமலர் போன்ற நடிப்புக்கு ஸ்கோப் அதிகமுள்ள படங்களை விட என்னை அதிகமாய் கவர்ந்தது அவர் அட்டூழியம் பண்ணிய காமெடி படங்கள் தான் .....அதகள காமெடி சிவாஜிக்கு கை வந்த கலை.. அந்த வகையில் ரஜினி, விஜய்க்கெல்லாம் முன்னோடி சிவாஜி சார் தான்....
கலாட்டா கல்யாணம், அஞ்சல்பெட்டி 520, பலே பாண்டியா, சபாஷ் மீனா, நவராத்திரி படத்தின் சில கேரக்டர்கள் இப்படி... இந்த படங்களில் முறையே, நாகேஷ், எம் ஆர் ராதா, சந்திரபாபு இவர்களுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டி... செம..... படையப்பா இந்த வரிசையில் வராதான்னு கேக்க கூடாது...
அப்புறம் முதல் மரியாதை... சொல்ல வேண்டிய அவசியமே இல்லாத ஒரு காவியம்.... பாரதிராஜா சிவாஜியின் கடைசி சொட்டுவரை பிழிந்து எடுத்திருப்பார்... ஆனால் சிவாஜியோ... இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லப்பா என்பது போல் அனாயாசமாக திரைக்குள் "வந்துட்டு" போயிருப்பார்...
எல்லாத்துக்கும் மேல... அவரது அனைத்து திறமைகளையும் ஒரே படத்தில் - காமெடி உட்பட - குறைந்த நேரத்தில் காட்டி பழைய படங்களை பார்க்க வாய்ப்பில்லாத இளைய தலைமுறைக்கும் நடிப்பென்றால் என்னவென்று காட்டிய படம் - தேவர் மகன்...
அந்த படம் மட்டும் வரலைன்னா இன்றைய சின்ன பசங்க "பூப்பறிக்க வருகிறோம், படையப்பா, ஒன்ஸ் மோர்" இப்படி படங்களில் வரும் சிவாஜி தான் உண்மைன்னு நம்பிட்டு இருந்திருப்பானுக... ரொம்ப நன்றி கமல் சார்....
தேவர் மகன் படம் என்றும் ஸ்பெஷல் தான் எல்லா வகையிலும்.... அந்தளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் கலக்கி எடுத்திருப்பார்............
சிவாஜி எனும் பல்கலை கழகம்....
No comments:
Post a Comment