Sunday, July 21, 2019

மெட்ராஸ்_நல்ல_மெட்ராஸ்-

தீபாவளிக்கு ...
பாரிஸ் கார்னரில்
இப்போதைய சரவணபவன் இருக்கும் இடத்தில் ...
சுபைதா டெக்ஸ்டைல்ஸில் ரெடிமேட் பட்டி டவுசர்,
ஸ்லாக்‌ஷர்ட்
தீபாவளி பொங்கலுக்கு கிடைத்தவர்கள் ...
பாக்கியவான்கள்.
அப்போதெல்லாம் தள்ளுபடிக்கு பாய்பவர்கள் இல்லை வாடிக்கையாளர்கள்.
பட்டுக்கு காஞ்சீபுரம் போக முடியாவிட்டால்
கந்தசாமி கோவில் தெரு ... மணிசங்கர் தவே.
ஆரிய பவன் தோசை.
இப்ரஹீம் கரீம் குடை.
ரெயின் கோட்,
ஸ்வெட்டருக்கு யூனூஸ் சேட்/
யூசுஃப் சேட் கடை,
புடவைக்கு மங்காராம்.
சீக்கோ வாச்சுக்கு பர்மா பஜார்
பல் நோவுக்கு ரத்தன் பஜார்
சீன டாக்டர்கள்.
செங்கல் சோப்பு லைப்பாய்
எழும்பூர் டிராம் ஷெட்.
நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு
இரவில் மவுண்ட் ரோடு பகுதியில் ரிக்க்ஷா பிரயாணம் செய்தால் தவறாமல் பிசாசு பின் தொடரும் என்று ஒரு பேச்சு உண்டு.
கதவுகள் வைத்த சாலிடேர் டி.வி.
கொலைகாரன்பேட்டை.டுமீல் குப்பம்.
வெள்ளிக்கிழமை தோறும் சென்னை தூர்தர்ஷனில் ‘ஒளியும் ஒலியும்’.
கிண்டி ரேஸ்.
இன்று எலெக்ட்ரிக் ரயில்களில் பயணம் செய்பவர்கள், ‘ஒரு ரிட்டர்ன் கொடுப்பா…!’ என்று இயல்பாகக் கேட்கிறார்கள்.
ரிட்டர்ன் டிக்கெட் எப்படி வந்தது?
அந்த நாட்களில்
கிண்டி ரேஸுக்குப் போகிறவர்கள், ரேஸில் முழு பணத்தையும் கோட்டைவிட்டுவிட்டு நிற்பார்கள்.
வீட்டுக்குப் போகக் கூட காசு இருக்காது.
சிலர் டிக்கெட் வாங்காமல் ரயிலில் திரும்புவார்கள்.
இந்த நிலையைப் போக்கத்தான் ரேஸுக்குப் போகும்போதே,
வருவதற்கான டிக்கெட்டையும் வாங்கும் முறையை எலெக்ட்ரிக் ரயில்களில் அறிமுகப்படுத்தினார்கள் .
மூர்மார்க்கட் தனி உலகம்.
பேனா பேர் படிக்க சொல்லிவிட்டு சொக்காயை பிடித்து வாங்க வைப்பது
, 30ரூ தோல் செருப்புக்கு பித்தளை ஆணி 5 பைசை என்று ரோபோ வேகத்தில் டிசைன் கட்டி அடித்துவிட்டு
50ரூ கேட்டு மிரட்டும் வியாபாரம், குச்சி பால் ஐஸ்/சர்பத் ஒன்னு பத்துபைசா என்று சொல்லி
கெத்தாக பத்து சொன்ன பிறகு ஒரு ரூ பத்துபைசா என்ற மோசடியெல்லாம் வாசலோடு.
கிழக்குப் புறம் சென்டிரலைஒட்டி இரும்பு சாமான்கள்,
வகத்தி கபடாக்கள்
தெற்குப் புறம் மிலிடரி யூனி ஃபார்ம்கள்,
மேற்கே சூட்கேசுகள்/ரெக்ஸின் பைகள்
பார்டர் தாண்டி மெயின் காம்ப்ளக்சுக்கு வந்தால்
சுற்றிலும் புத்தகக் கடைகள்.
லுங்கி கட்டிக் கொண்டு வந்தால் டிக்கட் கொடுக்காத மினர்வா தியேட்டர்,
விசிலடித்தால் வெளியே இழுத்துப் போடும் காசினோ,
பிட்டுப் படத்துக்கு கெயிட்டி,
இளஞ்சோடிகள் படம் பார்ப்பதாக சொல்லிக் கொண்டு ஒதுங்க ப்ளூடைமண்ட் கண்டினுவஸ் ஷோ,
நேப்பியர் பாலம் அருகில் சுராங்கனி ரெஸ்டாரண்ட்
பின்புறம் நடந்தால் சண்டைப் பயிற்சி செய்வதாக சீன் போடும் ரவுடிகள்.
தாண்டிச் சென்றால் மணலில் தடுப்பு தடுப்பாக செய்த லவ் ஸ்பாட்,
ஜோடியோடு வராவிட்டால் ஜோடிக்கு காசு,
வேடிக்கை பார்க்க வந்தால் பொளேரென்று அறை,
மீட்டர் கேஜ் ரயில் நிலைய 15 பைசா மசால் தோசை
10 பைசா சாதா தோசை,
15 பைசா 2 இட்லி,
இட்லி தெரியாம சாம்பார்,
12 பைசா காஃபி,
8 பைசா டீ.
பட்டணம் வந்தா உயிர்காலேஜ் செத்த காலேஜ் பாக்காம போனா ஒரு மருவாதி இருக்குமா.
இன்னைக்கும் சபர்பன் ஸ்டேஷன் 14வது ப்ளாட்ஃபார்ம் முடியற இடத்துல இருக்க காடுதான் உயிர்காலேஜ்.
எவ்வளவு பசுமை.
ஜூன் மாசமே உள்ள குளிரும்.
முக்கியமான அட்ராக்‌ஷன் எம்.ஜி.ஆர் சிங்கம்,
சிவாஜி புலி.
அதையொட்டிய கதைகள், சண்டைகள்.
பெரிய தூக்குகளில் புளிசாதம், எலுமிச்சை சாதம் எல்லாம் கட்டி எடுத்துக் கொண்டு மரத்தடி விருந்து.
படிக்காத ஜனங்கள் பெரும்பாலும். அதனால் இலைகளை குப்பை தொட்டியில் போடுவார்கள்.
பிற்பாடு மினி ட்ரெயின் வந்தது.
சென்னைக்கு எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்தது.
மனுசன் நிலாவில கால் வச்சான். டெலிவிஷன் வந்தது.
14 மாடி கட்டிடம் எரிந்தது.
நேரு ஸ்டேடியத்திலிருந்து கிரிக்கட் சிதம்பரம் ஸ்டேடியத்துக்கு போச்சு.
இப்படி எவ்வளவோ மாற்றங்கள்.
மாறாதது ஒன்னு இருக்கான்னா இருக்கு.
ஜெமினி சர்க்கஸ்.
14வது ப்ளாட்ஃபார்ம் பக்கத்துல இருக்க அதே இடம்.
கிறிஸ்துமசையும் சேர்த்தா மாதிரியா ஆரம்பிச்சி பொங்கல் தாண்டி ஃபிப்ரவரி 2ம் வாரம் வரைக்கும்.
அதே டெண்ட்,
அதே காட்சிகள்.
அதே விஐபிகளுக்கு ஓசி பாஸ்கள்.
கிரிக்கட் சிதம்பரம் ஸ்டேடியத்துக்கு போனப்புறம் ஃபுட் பால் லீக் மேச் முன்னாடி யூரோ கப் எல்லாம் எம்மாத்திரம். .
முத்துராமன்,
ஜெய்சங்கர்,
நாகேஷ்
லுங்கியோட வந்து க்ரவுண்ட்ல உக்காரும்போது கூட விசிலும் கும்மாளமுமா மேட்ச் வருமா.
இவை எல்லாம் எந்தாண்டுகள்? ஒரு காலத்தில் சென்னை சொர்க்கமாக ஒரு பட்டணமாக அழகிய பதுமையாக இருந்துள்ளாள் என்பது மட்டும் தெரிகின்றது.
இன்று கிழவியை விட கேவலமாய் ஆக்கிவிட்டோமோ ?
மரங்கள்?
ஏரிகள்?
பிரித்தானிய கட்டடங்கள்,
அகண்ட சாலைகள் எல்லாம் எங்கே போயின?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...