Sunday, July 7, 2019

துரைமுருகனுக்கு தி.மு.க எதிர்ப்பு எம்.எல்.ஏ கேள்வியால் சிரிப்பு.

'என் தொகுதியில் அமையவிருந்த, விளையாட்டு மைதானத்தை, துரைமுருகன் தொகுதிக்கு கொடுத்துள்ளீர்கள். அதை, என் தொகுதியிலே அமைக்க வேண்டும்' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., வலியுறுத்தியதால், சபையில் சிரிப்பலை எழுந்தது. 
D.M.K,DMK,தி.மு.க,சட்டசபை, சிரிப்பு ,எம்.எல்.ஏ,துரைமுருகன்,செங்கோட்டையன்

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - அனிதா ராதாகிருஷ்ணன்: திருச்செந்துார் தொகுதிக்குட்பட்ட, உடன்குடி பகுதியில், கபடி, கால்பந்து, கைப்பந்து, மட்டைப்பந்து போன்ற விளையாட்டுக்களுக்கான, விளையாட்டு மைதானம் அமைக்க, அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் செங்கோட்டையன்: கருத்துரு எதுவும், அரசின் பரிசீலனையில் இல்லை.அனிதா ராதாகிருஷ்ணன்: இப்பகுதியில், விளையாட்டு ஆர்வமிகுந்த இளைஞர்கள் உள்ளனர். 


அவர்கள் விளையாட, பயிற்சி பெற, விளையாட்டு மைதானம் இல்லை.அமைச்சர் செங்கோட்டையன்: அங்கு இடம் எதுவும் இல்லை. இடம் தந்தால், அரசு பரிசீலிக்கும்.  அனிதா ராதாகிருஷ்ணன்: திருச்செந்துார், நாசரேத், வீரபாண்டியபட்டனம், காயல்பட்டனம் பகுதியில், மாநில, தேசிய விளையாட்டு வீரர்கள் உள்ளனர். எனவே, திருச்செந்துார், நாசரேத், உடன்குடி ஆகியவற்றில், ஏதேனும் ஒரு இடத்தில், விளையாட்டு மைதானம் அமைத்துதர வேண்டும். 

அமைச்சர் செங்கோட்டையன் : திருச்செந்துாரில், சிறிய விளையாட்டரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இடம் தந்தால், மைதானம் அமைக்க தயார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: என் காட்பாடி தொகுதி யில், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளதாக, செவிவழி செய்தி வந்தது. அதை, உடனே அமைத்து தர வேண்டும். 


அமைச்சர் செங்கோட்டையன்: வழக்கு காரணமாக, பணி காலதாமதமானது. தற்போது, வழக்கு முடிந்து விட்டது. விளையாட்டு பூங்கா, 15.67 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. பூமி பூஜைக்கு அழைப்பு வரும்.

அ.தி.மு.க., - ஜெயராமன்: பொள்ளாச்சி தொகுதியில், நீச்சல் குளம், உள் விளையாட்டரங்கம் போன்றவற்றை அமைத்து தர வேண்டும் என, கோரியிருந்தேன். அமைச்சரும் செய்து தருவதாக கூறியிருந்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொகுதிக்கு ஒதுக்கியதை விட, கூடுதல் நிதி ஒதுக்கி, அதை நிறைவேற்றி தர வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: பரிசீலனையில் உள்ளது. தி.மு.க., - நந்தகுமார்: என் அணைக்கட்டு தொகுதியில் தான், 15.67 கோடி ரூபாயில், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட இருந்தது. 


தற்போது அதை, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தொகுதியில் அமைக்கப் போவதாக, அமைச்சர் கூறுகிறார். அதை, என் தொகுதியில், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட, ஊசூர் பகுதியில் அமைக்க வேண்டும். டெண்டர் விட்ட இடத்திலே, அமைத்து தர வேண்டும். துவக்க விழாவிற்கு, என்னையும், எதிர்க்கட்சி துணைத் தலைவரையும் அழையுங்கள்; இருவரும் வருகிறோம். இவ்வாறு, அவர் கூறியதும், சபையில் சிரிப்பலை எழுந்தது. 


அமைச்சர் செங்கோட்டையன்: அணைக்கட்டு தொகுதிக்கு, அணை போடப்பட்டு விட்டது. அங்கு, சிறிய விளையாட்டரங்கம் கட்ட, நடவடிக்கை எடுக்கப்படும். 


தி.மு.க., - ஆஸ்டின்: கன்னியாகுமரியில், ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்; இவ்வாறு, விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...