Sunday, July 7, 2019

வேலூரில் தேர்தல் திருவிழா விடுதிகளில் முன்பதிவு விறுவிறு.

வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலுக்கு, தற்போதே, விடுதி அறைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.
Vellore,வேலூர்,தேர்தல்,திருவிழா

வேலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், அக்கட்சியின் பொருளாளர், துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்; அ.தி.மு.க., சார்பில், புதிய நீதிக்கட்சி தலைவர்,ஏ.சி.சண்முகம் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: அ.தி.மு.க., சார்பில் பகுதி, நகரம் மற்றும் ஒன்றியத்துக்கு, தலா ஒரு அமைச்சர் களம் இறங்குகின்றனர். வேலுார் லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கு, 13 அமைச்சர்கள் பொறுப்பேற்று, தேர்தல் பணி செய்வர். பிரசார திட்டம், மீடியா, பொதுக்கூட்டம் ஏற்பாடு, செலவினம், கூட்டணி கட்சி நிர்வாகிகளை கவனிப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு போன்ற பணிகளுக்கு, தலா ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இருபது அமைச்சர்கள், 20 மாவட்டச் செயலர்கள் மற்றும், எம்.எல்.ஏ., க்கள் அனைவரும், தேர்தல் வேலை செய்ய உள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தி.மு.க.,வுக்கு, அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் தலைமையில், 38 எம்.பி.,க்கள், 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் களம் இறங்குகின்றனர். முக்கிய வி.ஐ.பி.,க்களான பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், பிரசாரத்துக்கு வர உள்ளனர். இதனால், வேலுார் தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ் ஆகியவை, வரும், 15ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேலுார், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சட்டசபை தொகுதிகளில், நிர்வாகிகள், தொண்டர்கள் தங்க, நுாற்றுக்கணக்கான வீடுகள், திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கலுக்கு பின், வேலுாரில் தேர்தல் திருவிழா களைகட்ட உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...