விடிந்தால் தெரியும், கர்நாடக மாநில குமாரசாமி தலைமையிலான அரசு தப்புமா, கவிழுமா என்பது. ஆனால், அப்பா தேவகவுடாவிற்கும், மகன் குமாரசாமிக்கும் பதவி விசயத்தில் அதே துரதிருஷ்டம் தான் தொடர்கிறது.
பிரதமராக தேவகவுடா :
கடந்த 1996ல், இந்தியாவின் பிரதமராக கர்நாடகாவை சேர்ந்த தேவகவுடா பதவி ஏற்றார். லாலுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், மேற்கு வங்கத்தில் மிக நீண்டகாலம் முதல்வராக இருந்து சாதனை படைத்த ஜோதிபாசு என்று வடமாநிலங்களின் பெரும் தலைகள் எல்லாம் இருக்கும் போதும், தென்னகத்தை சேர்ந்த தேவகவுடாவுக்கு வெறும் 12 எம்.எல்.ஏ,க்கள் வைத்திருந்த போதும் அதிர்ஷ்டக்காற்று அடித்தது.
ஆனால், பதவி கிடைத்தும் 11 மாதங்களில், அதனை பறிகொடுக்கவேண்டிய நிர்ப்பந்தமும் எழுந்தது. அவருக்குப் பின் ஐ.கே.குஜ்ராலிடம் இழக்க வேண்டியிருந்தது. அதே துரதிருஷ்டம் தான் இப்போது அவரது மகன் குமாரசாமியையும் தொடர்வதாக தெரிகிறது.
முதல்வர் குமாரசாமி :
கடந்த 2018 கர்நாடக சட்டசபை தேர்தலில், 104 எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., முதற்பெறும் கட்சியாக வந்து ஆட்சியமைத்தது. எனினும், 80 தொகுதிகளில் வென்ற காங்கிரசும், 37 தொகுதிகளில் மட்டுமே வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் சேர்ந்து ஆட்சியமைத்தனர். காங்கிரசோடு கடும் பேரத்தில் ஈடுபட்டு, குமாரசாமி முதல்வரானார்.
அரசு கவிழுமா மீளுமா?
இப்போது 13 மாதங்களே ஆன நிலையில், மீண்டும் குமாரசாமி இடையிலேயே பதவியை பறிகொடுக்கும் சூழல் வந்துள்ளது. இன்று ( ஜூலை 22) நடைபெற உள்ள நம்பிக்கை ஒட்டெடுப்பில் அரசு கவிழவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். எனவே, தான் அப்பா தேவகவுடாவாக இருந்தாலும் மகன் குமாரசாமியாக இருந்தாலும், பிரதமர் முதல்வர் என்று பதவிகள் வருகிறது.
ஆனால், முழுமையான பதவிக்காலத்தை முடிக்கும் அதிர்ஷ்டம் இல்லை. அப்பாவுக்கும் மகனுக்கும் துரதிர்ஷ்டம் தொடர்கிறது என்கின்றனர், கர்நாடக அரசியல் நோக்கர்கள்!
No comments:
Post a Comment