உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனை டீன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனை டீன் ஆக டாக்டர் சாரதா என்பவர் பணியாற்றி வருகிறார் இரண்டு நாட்களுக்கு முன் இவருக்கு பணியில் இருக்கும் போதே திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது .உடனே பணியில் இருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது தன்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க சொல்லி அங்கு சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து அவர் விடுமுறையில் கோவைக்கு சென்றார்.
தமிழக அரசால் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு சூப்பர் ஸ்பெஷலிட்டி என்ற திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சியை சுற்றியுள்ள பல மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சாதாரண சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அந்த மருத்துவமனையின் உயர் பொறுப்பில் இருக்கும் டீனே தனியார் மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை எடுத்தது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
No comments:
Post a Comment