Friday, July 5, 2019

குளியல் அறையில் ரகசிய கேமரா - அறநிலையத்துறை இணை ஆணையர் கைது.

குளியல் அறையில் ரகசிய கேமரா - அறநிலையத்துறை இணை ஆணையர் கைது
இணை ஆணையர் பச்சையப்பன்

















மதுரையை அடுத்த சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் அமாவாசை முடிந்து அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதற்காக இந்துசமய அற நிலையத்துறை பெண் அதிகாரி ஒருவர் வந்துள்ளார். அவர் மலை மீது ஏறி, அங்கு கோவில் அருகில் உள்ள வி.ஐ.பி.க்கள் தங்கும் அறையில் தங்கினார். பின்னர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளார். உண்டியல் எண்ணும் பணி முடிய இரவு நேரம் ஆகிவிட்டதால் அங்கேயே உணவருந்திவிட்டு அந்த பெண் அதிகாரி வி.ஜ.பி.க்கள் அறையில் அன்று இரவு தங்கியுள்ளார். பின்னர் காலையில் பெண் அதிகாரி குளித்துவிட்டு வெளியே வந்தபோது, அந்த அறையில் ஒரு ஆணின் உடை தொங்க விடப்பட்டிருந்தது. அதில் 2 செல்போன்கள் இருந்தன. அதில் ஒரு செல்போன் பெண் அதிகாரியை நோக்கி படம் பிடிப்பது போன்று இருந்தது.

உடனே சந்தேகம் அடைந்த அவர், செல்போனை எடுத்து பார்த்தார். செல்போன் கேமரா இயங்கிய நிலையில் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அதிகாரி சந்தேக்கப்பட்டு குளியல் அறையில் இருந்த உடைகளை சோதனை செய்த போது, அதில் பேனா கேமராக்கள் இருந்தன.

அதில் ஒரு பேனா கேமரா இயங்கிக்கொண்டு இருந்தது. உடனே பெண் அதிகாரி அந்த பேனா கேமராவை எடுத்து வைத்துக்கொண்டார்.

இதையடுத்து மலையில் இருந்து இறங்கி வீட்டுக்குச் சென்ற உடன் பேனா கேமராவில் இருந்த மெமரி கார்டை எடுத்து தனது மடிக்கணினியில் போட்டு பார்த்து உள்ளார். அதில் அந்த பெண் அதிகாரியும், மற்றொரு பெண் ஊழியரும் குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதை பார்த்தவுடன் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைய துறை ஆணையரிடம் புகார் செய்தார். பின்னர் மதுரை டி.ஐ.ஜி.யிடமும் அவர் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், பெண் அதிகாரி தங்கிய அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன்தான், பெண் அதிகாரியும், மற்றொரு பெண் ஊழியரும் குளிக்கும் போது கேமராவில் படம் பிடித்துள்ளார் என்பது தெரிய வந்தது.

இந்துசமய இணை ஆணையரிடம் போலீசார் விசாரணை

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்துசமய இணை ஆணையர் பச்சையப்பனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...