Monday, October 14, 2019

சிதம்பரம் மீண்டும் கைது? :டில்லி கோர்ட் இன்று முடிவு.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரி அமலாக்க துறை தொடர்ந்துள்ள வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிப்பதாக டில்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவரான சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தபோது விதிமுறைகளை மீறி 'ஐ.என்.எக்ஸ். மீடியா' நிறுவனம் அன்னிய முதலீடு பெற அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.




இது தொடர்பாக சிதம்பரம் அவரது மகனும் காங். - எம்.பி.யுமான கார்த்தி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. சி.பி.ஐ.யால் ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் தற்போது டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கை அமலாக்க துறை விசாரித்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரி அமலாக்க துறை சார்பில் டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி அஜய் குமார் குஹார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
சிதம்பரம் கைது வழக்கு, இன்று முடிவு
அப்போது அமலாக்க துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா''ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அவரை கைது செய்ய அனுமதி அளிக்க வேண்டும்'' என்றார்.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்''ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு குறித்த அனைத்து விஷயங்களையும் சி.பி.ஐ. விசாரித்து முடித்து விட்டது. மீண்டும் அமலாக்க துறையும் விசாரிக்க வேண்டுமா? சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்'' என்றார்.இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான முக்கிய உத்தரவை இன்று பிறப்பிக்கவுள்ளதாக கூறி விசாரணையை நீதிபதி அஜய் குமார் ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே சி.பி.ஐ. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'சிதம்பரத்தை ஜாமினில் விட்டால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல மாட்டார். ஆதாரங்களை அழிப்பதற்கும் வாய்ப்பில்லை' என டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து விளக்கம் பெற விரும்புகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் விசாரணை நடக்கவுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...