Monday, October 14, 2019

ஐயா, இங்கு விவாத தலைப்புகளெல்லாம் பிரிவினைவாதம், ஹிந்து விரோதம், மோடி எதிர்ப்பு, இது தான்.

தமிழக ஊடகங்களுக்கு இணையாக ஊடக #அடிமூடர்களை பாகிஸ்தானிய ஊடகங்களில் மட்டுமே பார்க்க இயலும். அங்கேயும் #மோடி#இந்திய #வெறுப்புதான் அடிநாதம். வாழ்க்கையில் ஒரே ஒரு #புத்தகத்தைக் கூட #படித்தறியாத ஜெனரல்களும், ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளும் உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்கில் #புளுகுவார்கள். சமையல் குறிப்பு சொன்னால் கூட ‘காஷ்மீர் பனேகா ஆஸாதி’ என உளறி ‘மோடி ஏக் பத்மாஷ்ஹை’ என முடிப்பார்கள். சாதாரண அறிவு இருப்பவன் கூட இந்த முட்டாள்களை உடனே புரிந்து கொள்வான். துரதிருஷ்டவசமாக சாதாரண பாகிஸ்தானிக்கு அந்த #அறிவுகூட இருப்பதில்லை.
அதே நிலைமையைத்தான் நான் தமிழகத்திலும் பார்க்கிறேன். ஒருத்தன் கூட மறந்து கூட #உண்மையைப் பேசுவதில்லை. அடிப்பரை அறிவே இல்லாமல் ஆனால் #உத்தமன் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு உலக மகா நடிப்பு நடிக்கிறார்கள். மிகக் #கேவலமான சூழ்நிலை இது.
தமிழக ஊடகங்களில் காணப்படும் Intellectual Moronism ஒரு விஷயத்தின் அடிப்படையே புரியாத தோலான், துருத்தியானெல்லாம் கருத்துச் சொல்கிறேன் என்கிற பெயரில் உளறிக் கொட்டுகிறான். தொலைக்காட்சிகளில் தோன்றிப் பிணாத்துகிறாவர்களில் ஏறக்குறைய தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் சந்தேகமே இல்லாமல் அடிமடையர்கள். பெரும்பாலும் மோடியின் மீதான காரணமே புரியாத வெறுப்பை மட்டுமே கொட்டுபவர்கள். மீதமிருக்கிற ஐந்து சதவீதம் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி சந்தில் சிந்து பாடுகிறார்கள். மிகவும் கேவலமாக இருக்கிறது.
மோடி-ஜின்பிங் சந்திப்பு என்பது #உலக முக்கியத்துவம் வாய்ந்ததொரு நிகழ்வு. ஆனால் தமிழக ஊடகங்களுக்கு அதன் முக்கியத்துவமும், பின்னனியும் அறவே தெரியவில்லை. #அரைவேக்காடுகளைக் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் #அறிவே இல்லாதவனை எப்படியய்யா சகித்துக் கொள்வது? தமிழக ஊடகங்களில் வரும் ஒருத்தி அல்லது ஒருத்தனுக்காவது அறிவுக்கலை இருக்கிறதா? எங்கிருந்துதான் இந்த மண்டூகங்களைப் பிடிக்கிறார்கள் என்றே தெரிவதில்லை. தமிழகத்துப் பல்கலைக் கழகங்களில் #வரலாற்றுணர்வும்#நேர்மையும் கொண்டவர்கள் ஒருவர் கூடவா இல்லை? அவர்களைப் போன்றவர்களை அழைத்து #விவாதங்கள் நடத்தினால் ஏதாவது #அர்த்தம் இருக்கிறது?
அடிமுட்டாள்களை அல்லவா ஊடகங்களுக்கு அழைக்கிறார்கள்!
அப்படியே ஒரு நல்ல விவாதம் நடத்தினாலும் தமிழனுக்கு அதில் ஆர்வமிருக்கப் போவதில்லை என்பது உண்மைதான். அவன் #மூளை #மழுங்கடிக்கப்பட்டுவிட்டது#சாராயமும்#சினிமாவும் போதும் அவனுக்கு. இருந்தாலும் உண்மையை உண்மையாகச் சொல்வதல்லவா நல்லது? பொய்யைச் சொல்லி, பொய்யை விவாதித்து என்ன சாதிக்கப்போகிறார்கள்?
தமிழகத்தின் மிகக் கேவலமான காலம் இது. வடக்கத்தி ஊடகங்களில் இத்தனை கேவலம் நிகழ்வதில்லை. இதிலிருந்து தமிழகம் மீள்வது என்பது சாத்தியமில்லாத சூழல் வருவதற்கு முன்,
#ஊடக #ஒழுங்குமுறைச் #சட்டம் கொண்டு வந்தால் மீள்வதற்கு #சாத்தியமான ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் எங்கு காணினும் #மூடர்கள் #சூழ் தமிழகமாகிவிடக் கூடாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...