Monday, October 7, 2019

இப்படித்தான் ஒரு முறை...

இப்படித்தான் ஒரு முறை ஜப்பான் நாட்டு துணை முதல்வர் இரவில் ஒசாகா நகர ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்...
அப்போது இடியுடன் மின்னல் வெட்டிக்கொண்டே இருந்தது..
பிரயாணத்தின் போது ஜப்பான் நாட்டு து.முதல்வர் முப்பது விநாடிக்கொருமுறை ரயிலின் ஜன்னல் பக்கம் பார்த்து புன்னகைத்துக்கொண்டே வந்தார் .
அவர் அடிக்கடி புன்னகைக்கும் காரணம் யாருக்குமே புரியவில்லை ..
பொறுக்க முடியாத அவரது உதவியாளர் கேட்டார்..
தலைவரே அங்கே யாருமே இல்லையே.. எதற்கு சிரித்தபடி வருகின்றீர்கள் என்றார் ?
கடுப்பான தலைவர் சொன்னார்..
மங்குணி உதவியாளரே ..
என்மீது எவ்வளவு பாசம் இருந்தால் ரயிலுக்கு வெளியே ஓடிக்கொண்டே என் தொண்டன் ஒருவன் என்னை போட்டோ எடுத்தபடியே ஓடி வருவான் ?
அவன் போட்டோ எடுக்கும் போது நான் புன்னககைக்காவிட்டால் அவன் வருத்தப்படமாட்டானா என பதிலுரைத்தார் .
மின்னல் ஒளி முகத்தில் படுவதை
போட்டோ ஃப்ளாஷ் என எண்ணும் தலைவரின் அறிவைக் கண்ட உதவியாளர் தலையில் அடித்துக்கொண்டார் .

Image may contain: 2 people, people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...