தமிழக, பா.ஜ., தலைவராக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக, தமிழக, பா.ஜ., தலைவர் பதவி காலியாக உள்ளது. அதைக் கைப்பற்ற, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், ஏ.பி.முருகானந்தம், கே.டி.ராகவன், என, 10க்கும் மேற்பட்டோர், மத்தியில், கடும் போட்டி நிலவியது.
கடந்த சில மாதங்களாக, தமிழக, பா.ஜ., தலைவர் பதவி காலியாக உள்ளது. அதைக் கைப்பற்ற, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், ஏ.பி.முருகானந்தம், கே.டி.ராகவன், என, 10க்கும் மேற்பட்டோர், மத்தியில், கடும் போட்டி நிலவியது.

நடிகர் ரஜினி, கட்சி துவக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., விரும்புகிறது. எனவே, பிரபல தலைவர்களை தவிர்த்து, ரஜினியுடன் பேசுவதற்கு ஏற்ற வகையிலான ஒருவரை, தலைமை பொறுப்பில் ஈடுபடுத்த, ஆலோசித்தது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவராக, முருகன் என்பவர் உள்ளார்.
இவரை தலைவராக நியமிக்க, தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் ஆகியோர் பரிந்துரை செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.இவர்களின் பரிந்துரையை, தலைமை ஏற்று, நேற்று முருகன், பா.ஜ., மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த எல்.முருகன்?
தமிழக, பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, எல்.முருகன், 45, தற்போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார். முருகனின் சொந்த ஊர், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம். இவர், தேவேந்திர குலவேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவர், முதுநிலை சட்டப்படிப்பு படித்துள்ளார். மனித உரிமைகள் சட்டத்தில், பி.எச்.டி., பெற்றுள்ளார். 15 ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.
No comments:
Post a Comment