வங்கி ஊழியர்கள் சங்கம் (வழக்கம் போல) ஒரு தவறான வாதத்தை முன் வைத்திருக்கிறது.. அதாவது பொதுத்துறை வங்கிகள் நலிவடைந்த பொழுது அவற்றை வேறு வங்கிகளோடு அரசு இணைத்தது... இதனால் விஜயா, சிண்டிகேட், ஆந்திரா, தேனா, கார்ப்பரேஷன் போன்ற வங்கிகள் தம் சுயத் தன்மையை இழந்து விட்டன...
ஆனால் இதே போல 'திவாலான' தனியார் வங்கியான எஸ் பேங்கை 'பெயில் அவுட்' எனப்படும் காப்பாற்றும் முயற்சியை மத்திய பாஜக அரசு எஸ்பிஐ மூலம் கை எடுத்துள்ளதாக....இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல....மேலோட்டமாக பார்த்தால் இதில் உண்மை இருப்பதாக தோன்றும்.. ஆனால் உண்மை நிலை என்ன?
நலிவுற்ற பொதுத்துறை வங்கிகளை மற்ற பெரிய வங்கிகளோடு இணைத்ததால் அந்த வங்கிகள் தத்தம் பெயர்களை மட்டும்தான் இழந்தன...ஆனால் அதில் பணி புரியும் ஊழியர்களுக்கு எந்த வித பாதிப்பும் (சிறு சிறு இட மாறுதல்கள் என்பது தவிர) இல்லை... அவர்களின் வேலைக்கும் சம்பளத்திற்கும் உத்தரவாதம் உண்டு... அந்த பழைய வங்கிகளில் டிபாசிட் செய்தோருக்கும் கடன் வாங்கியோருக்கும் எந்த வித பாதிப்பும் இருக்காது...
(பழைய வங்கிகளின் ஷேர் ஹோல்டர்கள் என்ற கேட்டகரி் வேறு...இந்த இணைப்பின் மூலம் அவர்களின் முதலீட்டிற்கும் ஒரு பாதுகாப்பு கிட்டியுள்ளது)
தற்போது எஸ் பேங்க் கதைக்கு வருவோம்...இங்கு என்ன நடந்துள்ளது? மாரடோரியம் எனப்படும் வங்கிகளில் இருந்து எடுக்கப்படும் பணத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது...(இத்தகைய கட்டுப்பாடுகள் இணைக்கப்பட்ட/படவுள்ள பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு கிடையாது)....
மேலும் முக்கியமான ஒன்று... தற்போது இந்த எஸ் வங்கியில் எஸ்பிஐ 'கேப்பிடல் இன்ஃப்யூஷன்' எனப்படும் "முதலீடு" மட்டுமே செய்யும் ..... இந்த வங்கி எஸ்பிஐ உடன் இணையாது...மாறாக எஸ்பிஐ இந்த எஸ் வங்கியின் நிர்வாகத்தை முழுவதுமாக கையிலெடுத்து 'தனி நிர்வாகமாக' சில வருடங்கள் நடத்துவார்கள்...பிறகு நிலைமையைப் பொறுத்து முடிவெடுப்பார்கள்...
தற்போதே ஒரு சில முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்...இது எப்படி என்றால் எஸ்பிஐ தற்போது எஸ் வங்கியின் பங்குகளை குறைந்த விலையில் வாங்கி பின்னர் வங்கியின் நிலைமை சீரான பின்..பங்குகளின் விலை ஏறும் போது இன்வெஸ்டர்களுக்கு விற்று விட்டு வெளியேறுவது... இந்த நடைமுறையிலும் வங்கியை நடத்தப் போகும் அந்த இன்வெஸ்டர்கள் யார் என்பதை மத்திய ரிசர்வ் வங்கிதான் முடிவு செய்யப் போகிறது...
இன்னொரு முக்கியமான விஷயம்....இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு இருந்த "வேலைப் பாதுகாப்பு" - ஜாப் செக்யூரிட்டி தற்போது எஸ் பேங்கின் ஊழியர்களுக்கு இருக்காது...
இப்போது சொல்லுங்கள்.. மத்திய அரசு யாருக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளது? பொதுத்துறை வங்கிகளுக்கா? தனியார் துறைக்கா?
No comments:
Post a Comment