Wednesday, March 11, 2020

" சங்கடஹர சதுர்த்தி "

சங்கடங்கள் தீர்க்கும்
சங்கடஹர சதுர்த்தி
விரதம் இருப்பது எப்படி.
சங்கடஹரசதுர்த்தி
12.03.2020
சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு,
அருகிலுள்ள ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்.
பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும்.
அறுகம்புல் கொடுத்து,
விநாயகருக்கு அர்ச்சனை செய்து,
நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும்,
தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.
கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும்,
ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து,
பசுவுக்குக் கொடுக்க வேண்டும்.
கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.
வீட்டிலேயே மோதகம்,
சித்திரான்னங்கள்,
பால்,
தேன்,
கொய்யா,
வாழை,
நாவல்,
கொழுக்கட்டை,
சுண்டல்
என்று தயாரித்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
விநாயகருக்குப் பிடித்த இலை வன்னி இலை.
வன்னி இலைகளால் விநாயகரைப் பூஜிப்பது சிறப்பான பலன்களைத் தரும்.
அதிலும் வன்னி மரத்தடியே உறையும் கணபதி ஆனந்தமயமானவர்.
நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாயகரை வலம் வந்து வேண்டினால், வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
மரத்தடி,
குளக்கரை,
ஆற்றங்கரை,
ஆகிய இடங்களில் இருக்கும் கணபதி விசேஷமானவர்.
வெட்டவெளியில் வீற்றிருக்கும் கணபதியை நீராட்டி வணங்குவது நமது தொன்றுதொட்ட வழிபாடாக இருந்து வந்திருக்கிறது.
'நீராட்டி, பூச்சூட்டி, தூப தீபமிட்டு தெருப் பிள்ளையாரை வணங்கினால்
தீராத வினையெல்லாம் தீரும்’
என்பார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...