Thursday, March 12, 2020

லாபம்_தனியாருக்கு: #நஷ்டம்_மக்களுக்கு!


இந்தியாவில் யெஸ் வங்கி திவாலாகியிருக்கிறது.
ஆனால் அதன் சுமை முழுவதும் தற்போது பொதுத்துறை வங்கிகளின் மீது சுமத்தப்பட்டி ருக்கிறது.
தனியார் வங்கிக்கு ஓரே நோக்கம் தான். அது லாபம் மட்டுமே.
தனியார் வங்கியில் இருக்கும் பணம் மக்களின் பணம்.
அதில் நஷ்டம் ஏற்படுவதால் தனியார் வங்கி முதலாளிகள் கவலைப்படப் போவதில்லை.
மக்கள்தான் கவலைப்பட வேண்டும்.
எப்போதும் மக்களுக் காக சேவை செய்யும் அரசின் பொதுத்துறை வங்கி தான் தற்போதும் மக்களை காப்பாற்ற எப்போதும் போல் முன்வந்திருக்கிறது.
ஆனால் இதன் பின்னணியில் தனியார் வங்கி முதலாளிகளை காப்பாற்ற ..
அரசு பொதுத்துறை வங்கிகளை பலிகொடுக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
இதுதான் கூட்டுக்களவாணி முதலாளித்துவம்.
இந்த வங்கி திவால் என்பது இயற்கையாக நடந்த ஒன்றல்ல.
இந்திய ரிசர்வ் வங்கிக்கும், மத்திய நிதி அமைச்சகத்திற்கும் தெரிந்தே அவர்களின் ஆசியோடு கடந்த 6 ஆண்டுகளாக நடந்த மிகப்பெரிய மோசடிதான் இந்த திவால் நாடகம்.
இதை ஆர்.எஸ்.எஸ் தலைவரே சொல்லியுள்ளார் ...
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் இந்த வங்கி 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி கடன் கொடுத்திருக்கி றது.
குறிப்பாக 2016-17ம் ஆண்டில் 8373 கோடி வாராக்கடன் இருந்திருக்கிறது.
ஆனால் யெஸ் பேங்க் வெறும் 2018 கோடியை மட்டும் வாராக்கட னாக காட்டியிருக்கிறது.
அப்போதே இந்த வங்கி மோசடியில் ஈடுபடுகிறது என்பது மத்திய அர சிற்கும், நிதி அமைச்சகத்திற்கும் தெரிந்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
காரணம் இந்த வங்கியில் அதிக கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர்கள் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
அனில் அம்பானி மட்டும் 12,800 கோடி,
எஸ்ஸல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா ரூ 8400 கோடி கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை.
இதே போல் மொத்தம் 10 குழு மங்கள் 44 நிறுவனங்களின் பேரில் வாங்கி யிருந்த கடனை திருப்பி செலுத்தாத தொகை மட்டும் 34000 கோடி.
இந்த மோசடி பேர்வழிக ளுக்குத்தான் மோடி அரசு தொடர்ந்து விருது களையும் வழங்கி வருகிறது.
அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளிடம் 10 ஆயிரத்து 300 நிறுவனங்கள்
1லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் நினைத்தால் கடனை உடனே செலுத்த முடியும்.
வேண்டுமென்றே கடனை செலுத்தாமல் திவால் கணக்கு காண்பிக்கின்றன.
மாறாக அந்த பணத்தை கொண்டு புதிய சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர் என ரிசர்வ் வங்கி கூறுகிறது.
ஆனால் அந்த நபர்களின் பெயர்களை கூட வெளியிட மோடி அரசு மறுத்து அவர்களை பாது காத்து வருகிறது.
இந்த கார்ப்பரேட் களவாணிகளுக்குத்தான் லாபத்தில் இயங்கும்
எல்ஐசி போன்ற பொதுத் துறை நிறுவனங்களை தூக்கிக் கொடுக்க மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது.
மறுபுறம் இந்த களவாணிகளால் திவால் ஆன வங்கி முதலாளிகளை பாதுகாக்க
பொதுத்துறை வங்கிகளையும் பலி கொடுக்கிறது.
அதாவது லாபம் தனியாருக்கு.
நஷ்டம் முழுவதும் மக்களுக்கு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...