Tuesday, August 30, 2022

இந்த நல்லிணக்கம் மேம்பட வேண்டும்!

 கர்நாடக மாநிலம் விஜயபுராவில், மெஹ்பூப் முசாலி என்ற முஸ்லிம், பூஜா என்ற ஆதரவற்ற ஹிந்து பெண்ணை, 10 ஆண்டுகளாக வளர்த்து, ஹிந்து முறைப்படி சங்கர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்தில், இரு மதத்தினரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்

* பீஹார் மாநிலம் நாளந்தா மாவட்டம், மடி என்ற கிராமத்தில், மசூதியை ஹிந்துக்களே பராமரித்து, தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்த வழிவகுத்துள்ளனர்
*கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், இரிஞ்சாலா குடாவில், ஹிந்துக்களின் சுடுகாட்டு பராமரிப்பாளராக, 28 வயதான சபீனா ரஹ்மான் என்ற முஸ்லிம் பெண் பணியாற்றி வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான, 250க்கும் மேற்பட்டோரின்
உடல்களை தகனம் செய்துள்ளார்.
* கேரள மாநிலத்தில், அயப்புனா நுாஜூம் என்ற, 22 வயது மாணவி, கேரள பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்
* இதே மாநிலத்தில், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்னா சலீம் என்ற முஸ்லிம் ஓவியர், கிருஷ்ணர் மேலுள்ள பக்தியால், அவரது உருவத்தை பல வடிவங்களில் வரைந்து, ஆண்டுதோறும் ஜென்மாஷ்டமி நாளில், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார்*பீஹாரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்ற இஸ்லாமியரின் கடையில், 25 ஆண்டுகளாக பணிபுரிந்து உயிரிழந்த, ஹிந்து பெரியவர் ராமதேவ் என்பவரின் இறுதிச் சடங்கை, முஸ்லிம் குடும்பத்தினர் ஹிந்து முறைப்படி நடத்தியுள்ளனர்.
இப்படி நம் நாட்டின் பல பகுதிகளில், ஹிந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே பரஸ்பரம் நல்லிணக்கமும், சகோதரத்துவமும் நிலவி வருவது பாராட்டிற்குரியது; பெருமை தரும் விஷயமுமாகும். வாழு அல்லது வாழ விடு என்ற தத்துவத்தின் அடிப்படையில், வேற்றுமையில் ஒற்றுமையை காண்கிறோம். இது மேலும் வலுப்பெற்று, நாடு வளம் பெற பாடுபடுவோம் என, ௭௫வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ள நாம் உறுதி ஏற்போம். சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம்.

மெத்த படித்தவனுக்குபுத்தி கெட்ட கதை!

 'இலவசங்களே வேண்டாம் என்று, 'அட்வைஸ்' செய்ய நினைப்பவர்கள், சிறந்த பொருளாதார நிபுணர்களாக இருக்க வேண்டும்; பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

'குறைந்தபட்சம் நோபல் பரிசாவது வாங்கி இருக்க வேண்டும்' என, ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்திருக்கிறார், அமெரிக்க நாட்டில் பொருளாதாரம் படித்து, இரண்டு டிகிரிகள் வாங்கிய தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன்.
இந்த நாட்டை, பட்டதாரிகள் தான் ஆட்சி செய்ய வேண்டும் என அரசியல் சட்டம் இயற்றியிருந்தால், காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் முதல்வராகி இருக்கவே முடியாது.
சாதாரண பியூன் வேலைக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது; அரசியல்வாதிகளுக்கு, அப்படி எந்த தகுதியும் தேவையில்லை.அரசு ஊழியர்கள், 60 வயதுக்கு மேல் அரசு பணியில் நீடிக்க முடியாது. ஆனால், 70, 80 வயதானவர்களும், இந்த நாட்டின் ஜனாதிபதியாக, பிரதமராக, முதல்வராக பதவி வகிக்க முடியும்.
அரசு ஊழியராக வேண்டும் எனில், அவர்கள் மீது எந்த கிரிமினல் வழக்கும் இருக்கக்கூடாது. ஆனால், இன்று எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களாக பதவி வகிக்கும் பலர் மீது, கிரிமினல் வழக்குகள் நிறையவே இருக்கின்றன.
இதெல்லாம் சரி தான், நியாயமானது தான் என்று அமைச்சர் தியாகராஜன் சொல்வாரா? எத்தனையோ விஞ்ஞான கண்டுபிடிப்புகளை, இந்த உலகுக்கு அளித்த தாமஸ் ஆல்வா எடிசன் படிக்காதவர். படித்து பட்டம் பெற்று நோபல் பரிசு பெற்ற, சர்.சி.வி.ராமன் விஞ்ஞானியாக இருந்ததில் வியப்பில்லை. படிப்பறிவே இல்லாத ஜி.டி.நாயுடு, விஞ்ஞானியாக இருந்தார் என்பதே சிறப்பு.
முகமது பின் துக்ளக் என்ற மன்னன் படித்திருந்தும் நிர்வாக திறமையின்றி, படித்த முட்டாள் என்று பெயர் எடுத்தான். ஏட்டறிவை விட அனுபவ அறிவு தான் சிறந்தது. அதனால், நாடும், நாட்டு மக்களும் உருப்பட, ஒருவர் நல்ல யோசனை சொன்னால், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து, விதண்டா வாதமும், தற்பெருமையும் பேசினால், மெத்தப் படித்தவனுக்கு புத்தி கெட்டுப் போன கதையாகத் தான் முடியும். எவரும் அந்த நபரை ஏறிட்டு பார்க்க மாட்டார்கள்; சீண்ட மாட்டார்கள். இதையெல்லாம், படித்த மேதாவியான நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிந்து கொள்ள வேண்டும்.

உப்பு ஜாடிக்கு அடியில் இந்த பொருள் இருந்தால், உங்களுடைய கணவரின் முன்னேற்றம் தடைபடாது. சம்பாத்தியமே இல்லாத கணவருக்கும், பணம் சம்பாதிக்க வழி கிடைக்கும்.

 நமக்கான இணையான துணை கிடைத்து விட்டால், சுமை இல்லாமல் வாழலாம். ஆனால் இணையான துணை கிடைப்பதில் தான் பிரச்சனை. எல்லோருக்கும் வாழ்க்கையில் விரும்பியபடி கணவர் அமைவது கிடையாது. ஒரு சிலருக்கு இணையான மனைவியும் அமைவது கிடையாது. உங்களுடைய வாழ்க்கை துணை நீங்கள் விரும்பியபடி இருக்கவில்லையா. உங்கள் கணவருக்கு வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்களா. குடும்பத்தை நடத்துவதில் சிரமம் இருக்கிறதா. உங்களுக்காக தாந்திரீக ரீதியான ஒரு சின்ன பரிகாரம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு பொருத்தம் இல்லாத வாழ்க்கை துணை அமைந்திருந்தால் கூட, அந்த வாழ்க்கை துணையை உங்களுக்கு இணையான வாழ்க்கை துணையாக மாற்ற இந்த பரிகாரம் கை கொடுக்கும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு சமையலறையில் உப்பு ஜாடி இருக்க வேண்டும். அதாவது உப்பை பிளாஸ்டிக் டப்பாவில் கொட்டி பயன்படுத்தக் கூடாது. உப்பு ஜாடியில் கொட்டி இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லையென்றால் சிறிய மண்பானையில் கொட்டி இந்த பரிகாரத்தை செய்யலாம். உப்பு பிளாஸ்டிக் டப்பாவில் இருந்து இந்த பரிகாரத்தை செய்தால் பலன் கொடுக்காது.  உங்களுடைய கணவர் பயன்படுத்திய எதாவது ஒரு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த துணியாக இருந்தாலும் சரி. அவர் பயன்படுத்திய கைகுட்டையாக இருந்தாலும் சரி, அந்த துணியை நன்றாக துவைத்து விட வேண்டும். துவைத்து காயவைத்த துணியை நன்றாக மடித்து அதை சமையலறையில் வைத்து, அதன் மேலே உப்பு ஜாடியை வைக்க வேண்டும். (உப்பு ஜாடியை நீங்கள் எங்கு வைப்பீர்களோ அதே இடத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம். உப்பு ஜாடியை தூக்கி விட்டு அடியில் அந்த துணியை வைத்து விடுங்கள்.) மூன்று நாட்கள் உப்பு ஜாடி கணவரின் துணி மேல் இருக்கட்டும். நீங்கள் அப்படியே சமையலுக்கு அந்த உப்பை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மூன்று நாட்கள் கழித்து அந்தத் துணியை எடுத்து அப்படியே உங்களுடைய கணவரை பயன்படுத்த சொல்ல வேண்டும். கணவர் அணியும் சட்டை, பனியன் இப்படி அவர் வழக்கமாக உடுத்தும் எந்த ஆடையை வேண்டும் என்றாலும் நீங்கள் இந்த மாதிரி பரிகாரத்திற்கு எடுத்து பயன்படுத்தலாம். தவறு கிடையாது. உடுத்தியை ஆடையை சுத்தமாக துவைத்து விட்டு பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள்.   இப்படி செய்யும் போது உப்பில் இருக்கும் மகாலட்சுமியின் தன்மையானது நீங்கள் அடியில் வைத்திருக்கும் ஆடையில் நன்றாக இறங்கி இருக்கும். அதாவது அந்த உப்பில் இருக்கும் நேர்மறை ஆற்றல். உங்களுடைய கணவர் அந்த ஆடையை எடுத்து உடுத்திக் கொள்ளும் போது மகாலட்சுமி அம்சம் அவரையும் நிச்சயம் போய் சேரும். கிரக கோளாறு காரணமாகவோ, கெட்ட நேரம் காரணமாகவோ, அல்லது சோம்பேறித்தனத்தின் காரணமாகவோ உங்களுடைய கணவர் சரியான வேலைக்கு செல்லாமல், சரியான வருமானத்தை சம்பாதிக்காமல் இருந்தால், அந்த நிலைமை அத்தனையும் தலைகீழாக மாறி உங்களுடைய கணவருக்கு நல்ல நேரம் பிறக்கும். உங்கள் கணவரின் உடம்பை பிடித்திருக்கும் பீடை தரித்திரம் சோம்பேறித்தனம் அனைத்தும் உங்கள் கணவர் உடம்பை விட்டு நீங்கிவிடும். மாதம் ஒரு முறை இப்படி இந்த பரிகாரத்தை செய்து அந்த ஆடையை எடுத்து உங்களுடைய கணவரிடம் போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள். வாழ்க்கையில் சரியாக பாதையில் செல்லாத கணவன்மார்கள் கூட இந்த பரிகாரத்தை சேர்த்த பிறகு, நல்ல வழியில் செல்வார்கள் என்பது நம்பிக்கை. (உங்கள் கணவர் உடுத்திய ஆடையை துவைத்த பின்பு தான், உப்பு ஜாடிக்கு கீழே வைக்க வேண்டும். உப்பு ஜாடிக்கு கீழே வைத்த ஆடையை துவைக்காமல் எடுத்து கணவர் அணிந்து கொள்ள வேண்டும்.) முழு மன நிறைவோடு இந்த சிறிய பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

உன்னை பற்றிய தவறான எண்ணம் என்னில் வளர்ந்துக் கொண்டே இருக்கும்.

  பழைய மாணவர் ஒருவர் வயதாகி போன தனது ஆசிரியர் ஒருவரை சந்திக்க சென்றார்.

சந்திப்பின் பொழுது, "சார், உங்களை என்னால் என்றும் மறக்க முடியாது. ஒருமுறை நான் வகுப்பில் பேனாவை களவாடி விட்டேன். நீங்கள் எங்கள் அனைவரின் கண்களையும் கட்டி விட்டு ஒவ்வொருவரின் பாக்கெட்டையும் துழாவி தேடினீர்கள். உங்கள் கைகள் என் பாக்கேட்டை துழாவியபோது பெரும் பயத்தை உணர்ந்தேன்.
நீங்களும் அந்த பேனாவை என் பாக்கெட்டில் இருந்து எடுத்து விட்டீர்கள். பின் எல்லோரையும் கண்களை திறக்கச் சொல்லி, " *இதோ அந்தப் பேனா*" என்று உரிய மாணவரிடம் கொடுத்து விட்டீர்கள்.
ஆனால் நானோ நேரப்போகும் அவமானத்தை எண்ணி உள்ளூர பயந்தபடி இருந்தேன். நீங்களோ என்னை சக மாணவர்களுக்கு
காட்டிக் கொடுத்து அவமானப் படுத்தவில்லை. அதன் பிறகும் கூட என்னை வித்தியாசமான முறையில் நடத்தவும் இல்லை. இது என்னை மிகவும் பாதித்த விஷயம்." என்று சொல்லி முடித்தார்.
கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர், "அடடே.. நீர் தான் அந்த பேனாவை எடுத்தீர் என்று எனக்குமே தெரியாது. ஏன் என்றால் நானும் என் கண்களை கட்டி விட்டுத் தான் பேனாவை தேடி எடுத்தேன். உம்மை நான் பார்த்திருந்தால், பார்க்கும் நேரங்களில் எல்லாம் இந்த சம்பவம் நினைவுக்கு வரும். உன்னை பற்றிய தவறான எண்ணம் என்னில் வளர்ந்துக் கொண்டே இருக்கும். நானும் தவறாக உம்மை வழி நடத்தக் கூடும். இது உம் எதிர்காலத்தையே பாதித்து விடும். அதனால் தான் பேனாவை தேடும் போது நானும் என் கண்களைக் கட்டிக் கொண்டேன். " என்றார்.
அதைக் கேட்ட அந்த மாணவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தன.

காங்.,கில் ராகுலுக்கு எதிராக சசி தரூர்!

 வரும் அக்டோபரில் நடக்கவுள்ள காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் ராகுலை எதிர்த்து, கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து காங்., தலைவர் தேர்தலில் பல ஆண்டுகளுக்குப் பின், நேரு குடும்பம் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 காங்.,கில் ராகுல், சசி தரூர்!


காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்., 17ல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு போட்டியிட, ராகுல் தயங்குவதாக கூறப்படுகிறது. ஆனாலும், ஆதரவாளர்களின் நெருக்கடியால் கடைசி நேரத்தில் தன் முடிவை மாற்றி, தேர்தலில் அவர் களமிறங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


போர்க்கொடி



தலைவர் பதவிக்கு ராகுல் போட்டியிட்டால், அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட மாட்டார்கள் என, காங்., தலைமை நம்புகிறது. ஆனால் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள, 'ஜி 23' என, அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான சசி தரூர், 66, தேர்தலில் ராகுலை எதிர்த்து போட்டியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
சசி தரூர் கேரளாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையில் உயரதிகாரியாக பணியாற்றியவர். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர்.


புத்துணர்வு



எனவே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும்படி, அதிருப்தி குழு தலைவர்கள் அவரை வற்புறுத்தி வருவதாகவும், அவரும் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் மலையாள நாளிதழ் ஒன்றில் சசி தரூர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:கட்சியை புத்துணர்வுடன் வைத்திருப்பதற்கு புதிய தலைமை தேவைப்படுகிறது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பழமைவாத கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், சர்வதேச அளவில் இப்போது கவனம் பெற்றுள்ளது. அங்கு, 2019ல் நடந்த தேர்தலில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பலர் போட்டியிட்டனர். இதுபோன்ற ஆரோக்கியமான ஒரு சூழலை காங்கிரசிலும் ஏற்படுத்த வேண்டும். வெளிப்படையான, நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.



தொலைநோக்கு



கட்சியில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்கான திட்டம் இருக்க வேண்டும். அதேநேரத்தில், நாட்டு நலனுக்கான தொலைநோக்கு பார்வையும் இருக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சி என்பது, நாட்டுக்கு சேவை செய்யும் கருவியும் கூட. இவ்வாறு அதில் அவர் எழுதியிருந்தார். இது குறித்து சசி தரூரிடம் கேட்டபோது, ''காங்., தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனா என்பது குறித்து இப்போது எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் கட்டுரையில் நான் தெரிவித்திருந்த கருத்துகளில் உறுதியாக உள்ளேன்,'' என்றார்.இது குறித்து காங்., பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:


தேர்தல் தேதி



காங்கிரசில் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வெளிப்படையாகவே நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் உள்ள தகுதி பெற்ற யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

'காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் போட்டியிட்டு, அவரை எதிர்த்து சசி தரூர் களமிறங்கினால், இந்த தேர்தலில், இந்திராவுக்குப் பிறகான நேரு குடும்பம், போட்டியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


காங்கிரசுக்கு 64 நிர்வாகிகள் முழுக்கு



முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரசில் பல முக்கிய பதவிகளை வகித்தவருமான குலாம் நபி ஆசாத், கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். சமீபத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்த அவர், காங்., - எம்.பி., ராகுல் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த காங்., மூத்த தலைவர்கள் 64 பேர், அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜீத், மனோகர்லால் சர்மா, காரு ராம், முன்னாள் எம்.எல்.ஏ., பல்வான் சிங் ஆகியோர், காங்கிரசிலிருந்து விலகியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இது குறித்து அவர்கள் கட்சி தலைவர் சோனியாவுக்கு அனுப்பிஉள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகள் உழைத்துள்ளோம். ஆனால் எங்களுக்கு எந்த அங்கீகாரத்தையும் கட்சி மேலிடம் தரவில்லை. அதற்கு பதிலாக அவமானத்தைத் தான் சந்தித்துள்ளோம். காஷ்மீர் அரசியலில் எங்களை வழிநடத்திய குலாம் நபி ஆசாத் தலைமையை ஏற்க முடிவு செய்துள்ளோம். அவர் துவக்கவுள்ள கட்சியில் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

அவசர ஆலோசனை


காங்கிரசில், 'ஜி 23' என அழைக்கப்படும் அதிருப்தி குழு தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா, ஆனந்த் சர்மா, பிரித்விராஜ் சவான் உள்ளிட்டோர், குலாம் நபி ஆசாத்தை நேற்று டில்லியில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.

Monday, August 29, 2022

வியாக்கியானம் பேசுகின்றனர் .

பொழுதுக்கும் ..
சேவல்ல நின்னு ஜெயிச்வர் ..
எதிர்கட்சியாக 75 சீட்டு ஜெயிக்க வச்சவர்ன்னு ..
சொல்றாங்களே ..
அவங்களுக்கு .
ஒரே கேள்வி ..
கடைசியாக நடந்த .
உள்ளாட்சி தேர்தலில் .
கொங்கு பெல்ட்லயே படுதோல்வியடைந்தது ..
கோவை மாவட்டத்தில்
வெள்ளளூர் பேருராட்சியை தவிர அனைத்து இடங்களிலும் தோற்றது .
சேலம் ஈரோடு கோவை திருப்பூர் மாநகராட்சிகளில் படுதோல்வி அடைந்தது ..
இதற்கு பதிலாக .
உள்ளாட்சி தேர்தல் ன்னாலே ஆளுங்கட்சிதான ஜெயிக்கும் என்று வியாக்கியானம் பேசுகின்றனர் .
ஆனால் ..
எடப்பாடி ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில்
திமுக 60% வெற்றியை பதிவு செய்தது ...
இதை ஏனோ எல்லாரும் சௌகர்யமாய் மறந்து விடுகின்றனர் அல்லது மறைத்து விடுகின்றனர் .

வெள்ளலூர் பேரூராட்சி வெற்றி கூட தனிநபர் செல்வாக்கால் கிடைத்த வெற்றி இந்த எட்டப்பன் கூட்டத்திற்காக கிடைத்தத வெற்றி அல்ல.

சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்றால் ..ஏன்? எடப்பாடி அவர்களைப் அம்மா ஒரு முறை கூட முதல்வர் ஆக்கவில்லை...!

என்ன நீங்க வெற்றிக்கு மட்டும் தான் அவர் பொறுப்பாம் தோல்விக்கு கட்சி தான் பொறுப்பாம்....

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை: சசிகலா, விஜயபாஸ்கர் உட்பட நால்வரிடம் விசாரணை?

 துாத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன், ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கைகளை, சட்டசபையில் தாக்கல் செய்ய, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. மாலை 6:00 மணிக்கு துவங்கிய கூட்டம் இரவு 7:15 வரை நீடித்தது.

* துாத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் அறிக்கை, மே 18ல் அரசிடம் அளிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.


latest tamil news



ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்ளிட்ட 17 போலீசார்; மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட நான்கு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளின் பரிசீலனையில் உள்ளன. அந்த துறைகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பின், அதற்கான விபர அறிக்கையுடன், கமிஷன் இறுதி அறிக்கையை, சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

*முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கையும், 27ம் தேதி அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைப்படி, சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது, விசாரணைக்கு உத்தரவிட, சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகள் பெற முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின், அது தொடர்பான விபர அறிக்கையுடன், ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையை, சட்டசபையில் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

* 'ஆன்லைன் ரம்மி' உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் சமுதாய கேடுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விளையாட்டுக்களை தடை செய்ய, அவசர சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக, அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழனைத் திராவிடன் என்று திரித்துப் பேசிய ஈ.வெ.ரா. தெ.பொ.மீனாட்சி சுந்தரம் கூறியதை செவிமடுத்தாரா?

தலையினை மீட்டுத்தான் தலைநரைக் காக்கவேண்டும் என்ற தலைப்பிட்டுப் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் 1.5.47 தேதியிட்ட “தமிழ்முரசு” இதழில் எழுதினார்.
வேண்டுவது திராவிட நாடோ, இந்திய நாடோ அல்ல; தமிழ்நாடே என்று கூறி ஈ.வெ.ரா.வின் திராவிட நாடு என்ற திரிபுவாதத்தை மறுத்து அவர் கட்டுரை எழுதினார்.
அதன் முகமையான பகுதி இதோ!
”மொழிவழி நாடு என்ற உண்மையை ஆந்திரரும் கேரளரும் கன்னடரும் உணர்ந்திருப்பது போலத் தமிழன் உணரவில்லை.
தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ன காண்கிறோம்? என்ன கேட்கின்றோம்? “தமிழ்நாடு என்றால் “தமிழ்ஸ்தான்-பாகிஸ்தான்” என்று கூறி விடுவதிலேயே அறிவின் அறுதியான எல்லை உண்டு என அகமகிழ்வோர் ஒருபுறம்; திராவிடநாடு”, “இந்தியநாடு” எனப் பேசுவதே அரசியல் அறிவொளி வீசுவதாம் எனச் செருக்கித் திரிவோர் மறுபுறம். ஆந்திரநாடு, கன்னடநாடு, கேரளநாடு எனப் பேசுவது போலத் தமிழர், “தமிழ்நாடு” என ஒருமுகமாகப் பேசக் காணோமே!
“தமிழா எழுந்திரு! எதிர்காலத் தமிழ்நாட்டினைப்பற்றி எண்ணத் தொடங்கு! தலையை அடகு வைத்தது போதும்! தலையை மீட்டுத் தலைநகரைக் காப்பாற்று!” (புதிய தமிழகம் படைத்த வரலாறு, பக்கம் 94.)
என்று தெளிவுபடத் தமிழ்நாடு மொழிவழியே அமையவேண்டுமென தெ.பொ.மீ.அவர்கள் பதிவுசெய்துள்ளார்.
ஆனால், ஈ.வெ.ரா, “தமிழ்-தமிழர்-தமிழ்நாடு” என்பதைச் செவிமடுத்தாரா? இல்லையே! காரணம் அவர் தமிழர் அல்லர் என்பதே!
ஆகையால், ஈ.வெ.ரா. தமிழரின் இனப்பகையே!
May be an image of 1 person and text that says "தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் 1901-1980"

ஏழை மனநிறைவோடு வாழ்கிறான்...

 பணக்காரருக்கு பாடம் புகட்டிய ஏழை..காசு, பணம் இருந்தால் மட்டும் போதுமா...? நிறைவான வாழ்வு வேண்டாமா...!? அடுத்த வேளை உணவிற்கு வழியில்லை என்றாலும் ஏழை மனநிறைவோடு வாழ்கிறான்...

போதும் என்ற மனதுடன் வாழ்பவர் மட்டுமே இந்த உலகில் நிறைவாக வாழ்கிறார். இருப்பவருக்கு கொடுக்க மனமில்லை. இல்லாதவர்களுக்கு உதவும் எண்ணம் அதிகமாக உள்ளது ...
ஒரு வசதியான செல்வந்தரது வீட்டின் அருகே சிறிய குடிசை வீடு. அங்கு காளிமுத்து மற்றும் இலட்சுமி என்ற கணவன் மனைவியும் மற்றும் ஒரு குழந்தையும் வசித்து வந்தார்கள்...
ஒருநாள் காளிமுத்து ஒரு குடம் தண்ணீர் கேட்க செல்வந்தர் வீட்டிற்க்குச் சென்றார். அங்கே!, அந்தப் பணக்காரர் அலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார்...
அப்பொழுது, ஐயா ! ஐயா ! என்று அழைத்தார் அந்த ஏழை காளிமுத்து. பின்பு, சிறிது நேரம் கழித்து உனக்கு என்ன வேணும்?என்று கேட்டார்...
ஐயா! ,ஒரு குடம் தண்ணீர் வேண்டும் என்றார். நீ யார்?, உன் வீடு எங்கு
இருக்கிறது...? என்றார். ஐயா, வீடு இல்லை ஒரு சாதராண குடிசை...
உன் வீடு எங்கே இருக்கின்றது!?, என் வீடு எங்கே இருக்கின்றது!, .நீ வந்து இங்கு தண்ணிர் கேட்கலாமா...? தண்ணீர் எல்லாம் இங்கே இல்லை. நீ போகலாம் என்று பணக்காரர் திமிராக ஒருமையில் பேசினார்...
சரிங்க ஐயா என்று வருத்தத்துடன் அந்த இடத்தை விட்டு அவர் குடிசைக்கு வந்தார் காளிமுத்து...
பின்பு!, சில நாட்களுக்குப் பிறகு ,அந்த வழியாக காளிமுத்து போய்க்கொண்டிருந்த போது, அந்தப் பணக்காரர் பயங்கர கோபத்துடன் கத்தி அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தார்...
அவரது மகன் விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சைக்கு குருதி தேவைப்படுகிறது. ஆனால்!, அவருடைய நண்பர்கள் குருதியளிக்க யாரும் முன்வராததால் அலைபேசியில் கோபமாக பேசிக் கொண்டு இருந்தார்...
இவர் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த காளிமுத்து அவரிடம் பேசச் சென்றார்...
ஐயா! என்று அழைத்தார். அவர் நீயா தண்ணீர் தானே உனக்கு வேணும்.. எடுத்துட்டு போ. என்று கோபத்துடன் சொன்னார்..
மறுபடியும் ஐயா! என்று அழைத்தார். ஆனால்!, சிறிதும் கண்டு கொள்ளாமல் பேசிக் கொண்டே இருந்தார். மீண்டும் ஐயா!, என்று அழைத்தார். தண்ணீர் தானே வேண்டும் உனக்கு ..? .அந்தத் தொட்டி முழுவதும் எடுத்துக் கொண்டு செல், என்று தொடர்ந்து அலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தார்.
பிறகு, ஐயா நீங்க கேட்ட குருதி எம்மிடம் இருக்கிறது என்று பலமாகக் கத்தினார். அப்போது தான் அந்தப் பணக்காரார் இவரை ஏறெடுத்துப் பார்த்தார்...
பின்பு சாந்தமாக, என்னை மன்னித்து விடுப்பா!, நீங்கள் தண்ணீர் கேட்கத்தான் வந்திருப்பீர்களென்று நினைத்தேன்...!
வாருங்கள் மருத்துவமனைக்குப் போலாம். அங்கு, காளிமுத்து சென்று குருதி கொடுத்தப் பிறகு சிகிச்சை தொடங்கி
அந்த செல்வந்தர் மகனைக் காப்பாற்றி விட்டார்...
பின்பு, காளிமுத்து பணக்காரனிடம் பேச வந்தார். ஐயா என்று அழைத்த காளிமுத்துவைப் பார்த்து என்னை மன்னித்து விடப்பா...!
உங்களை நான் மனதளவில், மிகவும் காயப்படுத்தி இருக்கிறேன் என்று திடீரென்று காலில் விழுந்தார் அந்த செல்வந்தர்...
பின்பு, ஐயா, நீங்கள் போய் இதெல்லாம் செய்யலாமா...? ஐயா!, ,நாங்கள் ஏழைகள் தான். ஆனால்!, மனிதாபிமானம் அற்றவர் அல்ல. எங்களிடம் பணமில்லாமல் இருக்கலாம். ஆனால்!, எங்களிடம் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கிறது என்றார்...
பல கோடிக்கு வாகனத்தை வாங்கினாலும் சாலையில் தான் நிறுத்த முடியும் வீட்டிற்குள்ளேயா நிறுத்த முடியும்....!
பல ஆயிரம் ரூபாய்க்கு செருப்பு வாங்கியதைக் காலில் தான் போட முடியும். தலை மேல வைக்க முடியாது...ஒரு அறை முழுவதும் பணம் வைத்திருக்கலாம், ஆனால்!, குருதி தேவைப்படும் போது பணத்தை அரைத்து ஏற்றிக் கொள்ள முடியாது...

விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்?

 விநாயகர் சதுர்த்தி வர இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அனைவரும் மிகவும் ஆவலாக காத்திருக்கும் பண்டிகை இதுவாகும். வட்டாரங்கள் மற்றும் பண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, யானையின் தலையை கொண்ட கடவுளை ஒவ்வொரு இந்து வீட்டிலும் பயபக்தியுடன் வணங்கிடுவார்கள். யானையின் தலை, தொந்தி வயிறு, எலியின் மீது சவாரிப்பது என விநாயகரை பல வடிவங்களில் குறிப்பிடுகிறோம். அவ்வளவு பெரிய கடவுளான விநாயகர் ஏன் ஒரு சின்ன சுண்டலி மீது பயணிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் பெரிய ஆவல் இருக்கும். சொல்லப்போனால், விநாயகர் இப்படி எலியின் மீது சவாரி செய்வதற்கு மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதையும் உள்ளது. அனைத்து தடங்கல்களையும் நீக்கி, பாரபட்சம் இன்றி அனைவரையும் ஆசீர்வதிப்பவர் தான் விநாயகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மற்ற கடவுள்களை வணங்குவதற்கு முன்பாக விநாயகரை ஏன் வணங்க வேண்டும் என்பதற்கு அவர் எலியின் மீது பயணிக்கும் கதையே விளக்கமளிக்கும்.

விநாயகர் பயணிக்கும் எலி, கடந்த ஜென்மத்தில் முனிவரால் சபிக்கப்பட்ட ஒரு உபதேவதையாக விளங்கியது என்ற விஷயம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். விநாயகர் ஏன் எலியின் மீது பயணிக்கிறார் என்ற கதையை முழுமையாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
க்ரோன்ச்சாவின் கதை
விநாயக புராணத்தின் படி, விநாயகரின் எலி கடந்த ஜென்மத்தில் உபதேவதையாக இருந்துள்ளது. அதனை க்ரோன்ச்சா என அழைத்தனர்.
இந்திரனின் அரச சபையில் வாமதேவ முனிவர் என்ற மிகுந்த ஞானம் கொண்ட முனிவரின் கால்களை க்ரோன்ச்சா மிதித்து விட்டது. வேண்டும் என்றே தன் காலை மிதித்து விட்டது என எண்ணி, வெகுண்டு எழுந்த வாமதேவ முனிவர், அதனை ஒரு எலியாக மாற சாபம் அளித்தார். இதனை கேட்டு அதிர்ந்த க்ரோன்ச்சா, அவர் காலில் மண்டியிட்டு கருணை காட்ட மன்றாடியது. இது வாமதேவ முனிவரின் கோபத்தை குறைத்தது. தன் சாபத்தை திருப்பி பெற இயலாது என கூறினார். ஆனால் விநாயகரின் வாகனமாக விளங்கும் எனவும் கூறினார். அதனால் அனைவராலும், ஏன் பிற கடவுள்களாலும் கூட வணங்கப்படும் ஒன்றாக மாறியது.
இதன் விளைவாக, வாமதேவ முனிவரின் சாபத்தினால் க்ரோன்ச்சா எலியாக உருமாறி, மகரிஷி பரஷர் ஆசிரமத்தில் விழுந்தது.
க்ரோன்ச்சாவின் பயங்கரவாதம்
இருப்பினும் க்ரோன்ச்சா சாதாரண எலியல்ல. சொல்லப்போனால், மலையளவில் பெரியதாக விளங்கியது. அதே போல் அதனை பார்த்த அனைவரையும் அஞ்ச வைத்தது. பல வகையான தொந்தரவுகளை அளித்து, கண்ணில் பட்ட அனைத்தையும் அழித்து வந்தது. உலகத்தில் வாழ்ந்த மக்களுக்கு பயங்கரத்தின் மற்றொரு அர்த்தமாக விளங்கியது.
விநாயகரின் வாகனம்
இந்நேரத்தில் தான் பரஷர் ரிஷியின் ஆசிரமத்திற்கு விநாயகர் அழைக்கப்பட்டார். அவரை பரஷர் ரிஷியும் அவரின் மனைவியுமான வத்சலாவும் கவனித்துக் கொண்டனர். ராட்சச எலியை பற்றியும், அது உருவாக்கியுள்ள பயத்தை பற்றியும் கேள்விப்பட்ட விநாயகர் அதனை எதிர்கொள்ள முடிவெடுத்தார். தன் ஆயுதங்களின் ஒன்றான பாஷாவை (சுருக்கு) எடுத்த விநாயகர், க்ரோன்ச்சா இருக்கும் திசையில் அதனை பறக்க விட்டார். அந்த பாஷா மிகவும் பிரகாசமாக இருந்ததால் அதன் வெளிச்சம் இந்த அண்டம் முழுவதும் படர்ந்தது. எலியை துரத்திய பாஷா அதன் கழுத்தை சுற்றிக் கொண்டது. அதை அப்படியே விநாயகரின் காலடியில் கொண்டு சேர்த்தது.
இதனால் விநாயகரிடம் மன்னிப்பு கோரிய க்ரோன்ச்சா அவரின் வாகனமாக மாறியது.
May be an image of flower and text

கட்சி பதவியை ராஜினாமா செய்து தொண்டர்களை சந்திக்க தயாரா? பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் சவால்.

 ''நான் எனது கட்சி பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்களும் ராஜினாமா செய்யுங்கள். தொண்டர்களை சந்திக்கலாம். நீங்கள் தயாரா'' என இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் சவால் விட்டுள்ளார்.


மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மதுரை மாநகர மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் ரங்கராஜ் திருமங்கலம் திருப்பரங்குன்றம் தொகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தேனிமாவட்டம் பெரியகுளத்தில் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி அமைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் .முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உருவாக்கி தொண்டர்கள் இயக்கமாக மாற்றினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சியால் எக்கு கோட்டையாக அ.தி.மு.க.வை மாற்றினார். கட்சியில் பொருளாளராக நான்கு மாதங்கள் தாக்குப்பிடிப்பது பெரிது என்ற நிலையில் நான் 13 ஆண்டாக பொருளாளராக பணியாற்றியுள்ளேன்.


latest tamil news



ஜூன் 23ல் காலை பத்து மணிக்கு நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு என் வீட்டை கடந்து காலை 8:00 மணிக்கு பழனிசாமி சென்றார். என்னை பொதுக்குழு கூட்டத்தில் வரவிடாமல் தடுக்கும் நோக்கத்தில் பழனிசாமிக்கு ஏழு இடங்களில் வரவேற்பு கொடுத்து செயற்கையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். போலீசார் உதவியுடன் கூட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது.


விசுவாசம்


என்னை 2001 ல் முதல்வராக்கினார் ஜெயலலிதா. பின்னர் அவர் மீதும் கட்சி மீதும் எனது விசுவாசம் காரணமாக 13 ஆண்டுகள் கழித்து 2014 ல் மீண்டும் என்னை முதல்வர் ஆக்கினார். கடந்த லோக்சபா தேர்தலில் 40 தொகுதியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றோம். அப்போது 'நான் உட்பட பத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து விட்டு 4 மாவட்டங்களுக்கு ஒருவரை நியமித்து அங்கு கட்சியை வளர்ப்பதற்கு இளைஞர்களை உருவாக்குவோம் ''என தெரிவித்தேன். இதனை ஏற்க மறுத்தனர்.


சவால்


நான் எனது கட்சி பதவியை ராஜினாமா செய்கிறேன். அதே போன்று நீங்களும் (பழனிசாமி) பதவியை ராஜினாமா செய்யுங்கள். இரண்டு பேரும் தொண்டர்களை சந்திக்கலாம். நீங்கள் தயாரா அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார்.

இரண்டு பேர்தான்...!

 *ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!*

*சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!*
காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு...
கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்.....
அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்!
உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்!
உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்!
ஒருவர் *சந்திரன்* !
ஒருவர் *சூரியன்* !
இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்.....!
சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்!
உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்!
ஒன்று *செல்வம்!*
இரண்டு *இளமை!*
இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!
சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! ....
உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்...!
ஒன்று *பூமி* !
எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்!
மற்றொன்று *மரம்* !
யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்!
சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்!
அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்...
ஒன்று *முடி* !
மற்றொன்று *நகம்* !
இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!....
தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்!
உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்!
ஒருவன் நாட்டை *ஆளத்தெரியாத அரசன்*
மற்றவன் அவனுக்குத் *துதிபாடும்* *அமைச்சன்* ! என்றாள்! ...
காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்!
உடனே அந்த பெண் மகனே... எழுந்திரு... என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்!
சாட்சாத் *சரஸ்வதி தேவி* யே அவர் முன் நின்றாள்!
காளிதாசர் கைகூப்பி வணங்கியதும்,
தேவி தாசரைப் பார்த்து... காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்!
*"நீ மனிதனாகவே இரு"* என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்...!
இதுபோலத்தான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கிறார்களே தவிர, மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு, நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத் தரவேண்டும்!
*பெற்றோரை தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், கைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையென வாழ்க்கையை இயந்திர மயமாக்கி மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது! ......*

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...