Tuesday, August 23, 2022

என்னென்ன வித்தைகள் காட்டுவரோ?

 நாட்டில் அரசியல் ரீதியாக ஊழலோ, முறைகேடோ, அன்னிய செலாவணி மோசடியோ, ஹவாலா பரிவர்த்தனையோ, சட்டவிரோத பணப் பரிமாற்றமோ நடந்தால், அவற்றை பெரும்பாலும், மத்திய அரசு ஏஜன்சி

களான, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தான் விசாரிக்கும். அதன்படியே, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை கபளீகரம் செய்து, ஏப்பம் விட்ட விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரது மகன் ராகுலும், அமலாக்கத் துறை விசாரணையின் பிடியில் சிக்கி, பேய் முழி முழிக்கின்றனர். அதேநேரத்தில், அவர்களிடம் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுதும் அமலாக்கத் துறை அலுவலகங்கள் முன், காங்., கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அதாவது, காங்கிரஸ் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தால், அதுபற்றி எந்த புலனாய்வு அமைப்பும் விசாரிக்கக் கூடாது. சுடுகாட்டில் பள்ளம் தோண்டி, அந்த பள்ளத்துக்குள் ஊழல் குற்றச்சாட்டுகளை புதைத்திட வேண்டும் என, அந்தக் கட்சியினர் நினைக்கின்றனர்; அதனால் தான் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், 'நாட்டில் ஊழலை ஒழிக்காமல் ஓயமாட்டேன்' என்று வீர சபதம் எடுத்து, ஆம் ஆத்மி என்ற பெயரில் அரசியல் கட்சியை துவக்கி, டில்லியில் ஆட்சியை பிடித்தவர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

இவரது தலைமையிலான அரசில், துணை முதல்வராக உள்ள மணீஷ் சிசோடியா, மது விற்பனை உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில், சி.பி.ஐ., அதிகாரிகளால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா, ராகுலிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், தற்போது மணீஷ் சிசோடியா விவகாரத்தில் முற்றிலும் மாறுபட்ட விதமாகப் பேசுகின்றனர். அதாவது, ஊழல் தொடர்பாக, தங்கள் கட்சியினரிடம் மத்திய அரசு நிறுவனங்கள் விசாரணை நடத்தினால் குற்றம்; மற்ற கட்சிகளிடம் விசாரித்தால் தவறில்லை
என்கின்றனர். அதனால் தான், 'டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில், சி.பி.ஐ., விசாரணை நடத்துவதை காங்கிரஸ் வரவேற்கிறது. சி.பி.ஐ., விசாரணையை பார்த்து ஆம் ஆத்மி ஏன் பயப்பட வேண்டும்?' என்று கேட்கிறார், டில்லியைச் சேர்ந்த காங்., முன்னாள் எம்.எல்.ஏ., அல்கா லம்பா.
அதே கேள்வியை தான் காங்கிரஸ் சோனியாவையும், ராகுலையும் பார்த்து நாடு கேட்கிறது; நாட்டு மக்கள் கேட்கின்றனர். 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை முழுங்கி ஏப்பம் விட்ட விவகாரத்தை விசாரிக்கும் அமலாக்கத் துறையை பார்த்து, தாயும், மகனும் ஏன் அஞ்சி நடுங்க வேண்டும்? அப்பாவிகளான தொண்டர்களை கூட்டி ஏன் போராட்டம் நடத்த வேண்டும்?
ராவணனுக்கு, 10 முகங்கள் இருந்தது போல, இந்த காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு இன்னும் என்னென்ன முகங்கள் இருக்கின்றனவோ... என்னென்ன
வித்தைகளும், வேடிக்கைகளும் காட்ட போகின்றனரோ... எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...