Friday, August 26, 2022

👍👍👍 வளது கொடூப்பது இடது கை அறிய கூடாது 🙏🙏🙏

மதிப்பான ஒருவர் உணவகத்தில் நுழைந்தார், உணவை உண்ட பின்னர் கட்டணத்தை கட்ட சட்டைப் பையில் கையை போட்டார். பணப்பை இருக்கவில்லை. அலுவலகத்தில் மறந்து வைத்து விட்டு வந்ததை உறுதிப்படுத்திக் கொண்டார். ஆங்காங்கே பணம் இருக்கிறதா என்று பார்க்க பாக்கெட் எங்கும்தேடுதல் வேட்டை நடத்தினார். இருக்கவில்லை, அவர் முகம் மாறியது, அந்த இடத்தில் சஞ்சலப்பட்டார்.

எப்படி வெளியேறுவது என்று குழம்பிப் போனார். முடிவாக தனது கைக் கடிகாரத்தை அடமானமாக வைத்துவிட்டு பணம் எடுத்து வர முடிவெடுத்தார்.
இதுபற்றி உணவக உரிமையாளரிடம் அவர் பேச ஆரம்பித்தவுடன் 'உங்கள் கணக்கு ஏற்கனவே ஒருவர் செலுத்திவிட்டு சென்றுவிட்டார்' என்றார்.
அவர் உங்கள் தடுமாற்றத்தை கவனித்தார், அதனால், உங்கள் கணக்கையும் செலுத்திவிட்டு வெளியே சென்றார்.
வியந்து போன அவர், யார் அந்த ஆள்? அவருக்கு நான் எப்படி பணத்தை திருப்பிக் கொடுப்பது என்று உணவக உரிமையாளரிடம் கேட்டார்.
அதற்கு அந்த உணவக உரிமையாளர்: அவர் யார் என்று எனக்கும் தெரியாது, ஆனால் உங்களுக்கு யாராவது அவசரத்துக்காக உதவிக்கரம் நீட்டினால் நீங்கள் வேறு ஒரு இடத்தில் அவதிப்படும் ஒருவருக்கு உதவிக்கரத்தை நீட்டுங்கள்!
இப்படித்தான் மக்களுக்கு மத்தியில் தான, தருமங்கள் வலம் வந்துகொண்டிருக்க வேண்டும்' என்றார்.
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...