Monday, August 22, 2022

சுரங்கங்களை தாரை வார்க்காதீங்க!

  மத்திய அரசின் தனியார்மய கொள்கைப்படி, நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமின்றி, லாபத்தில் இயங்கும் எல்.ஐ.சி., போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளும் தனியாருக்கு விற்கப்பட்டு, தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆந்திரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள, ௧௩ தங்கச் சுரங்கங்களை ஏலம் விட, மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த தங்கச் சுரங்கங்களை மத்திய அரசே தொடர்ந்து நடத்துவதில், என்ன பிரச்னை உள்ளது என்பது, சாமானிய மக்களுக்கு தெரியவில்லை. தமிழ் இலக்கியத்தில் வரும் மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல, எடுக்க எடுக்க குறையாமல் வரும் தங்கச் சுரங்கங்களை தனியாருக்கு விற்பது, நம் தாய் திருநாட்டிற்கு உகந்தது அல்ல என்பதே, பொதுமக்கள் பலரின் எண்ணம்.
எனவே, தங்கச் சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் மாற்றி யோசிக்க வேண்டும் என்பதே, நாட்டு நலனில் அக்கறை கொண்டோரின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...