Tuesday, August 23, 2022

நிலைக்குழு பரிந்துரையை கவனியுங்க!

 மூத்த குடிமக்கள், நம் முன்னோடிகளாக மட்டுமின்றி, ஆணிவேராகவும் உள்ளனர். அவர்களின் ரயில் பயணத்தை எளிதாக்கும் வகையில், மத்தி யில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இருந்த போது, ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்த லாலு பிரசாத் யாதவ், கட்டணச் சலுகையை வழங்கினார்; அந்த சலுகை பல ஆண்டு களாக தொடர்ந்தது.

கொரோனாவை காரணம் காட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், இச்சலுகை நிறுத்தப்பட்டது. கொரோனா முடிந்து, மீண்டும் சகஜநிலை திரும்பிய பிறகும், என்ன காரணத்தாலோ, அந்த கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படவில்லை. அது, ஏராளமான முதியோர்களுக்கு வருத்தம் தரும் விஷயமாக உள்ளது. எனவே, ரயிலில் முதியோர் பயணிப்பதற்கான கட்டணச் சலுகையை, ரயில்வே துறை மீண்டும் வழங்க முன்வர வேண்டும். அத்துடன் முதியோருக்கான கட்டணச் சலுகையை, அனைத்து உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு விரிவுபடுத்தவும், மத்திய அரசு உத்தரவிட வேண்டும். ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, இரு பாலருக்கும் பொதுவாக, 60 வயது பூர்த்தியானோரை மூத்த குடிமக்களாக அங்கீகரிக்கவும் வேண்டும். 'குறைந்தபட்சம் படுக்கை வசதி மற்றும் மூன்றா-ம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்காவது, கட்டணச் சலுகை வழங்க வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழுவும், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...