Thursday, August 25, 2022

தெற்கு ரயில்வே கவனிக்குமா?

 பெரிய ரயில் நிலையங்களில், பயணியருக்கு உதவுவதற்காக, விசாரணை மையம் ஒன்று செயல்படும். அங்கு ஒருவர் நியமிக்கப்பட்டு, ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு, நடைமேடை எண் என, பயணியரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிப்பார். அதற்கான பெயர் பலகையில், 'பயணியர் விசாரணை மையம்' என்பது, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளில் இருக்கும். தற்போது, 'பயணியர் விசாரணை மையம்' என்பதற்கு பதிலாக, 'சஹ்யோக்' என, ஹிந்தி மொழியில் மட்டுமே பெயர் பலகை வைக்க, தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களுக்கு வரும் பயணியரில், பெரும்பாலானவர்கள் பாமரர்கள் மற்றும் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள்.அப்படிபட்ட நிலையில், 'பயணியர் விசாரணை மையம்' என்பதற்கு பதிலாக, 'சஹ்யோக்' என்று பெயரிட்டால் எப்படி புரிந்து கொள்வர். 'சஹ்யோக்' என்ற ஹிந்தி வார்த்தைக்கு தமிழில், 'உதவி' என்று அர்த்தம். இது எல்லாருக்கும் தெரியுமா என்ன?

இந்தப் பெயர் பலகை விஷயத்தில், பயணியர் மத்தியில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசு மற்றும் ரயில்வே துறையில் பணியாற்றும் வட மாநில அதிகாரிகள் தான், இது போன்று தேவையில்லாமல் ஹிந்தியை திணித்து, மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகளே அமைதியாக இருக்கும் போது, இவர்களுக்கு ஏன் இந்த வீண் வேலை என்று தெரியவில்லை. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் பெயர் பலகை வைக்கும்படி, தெற்கு ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
ஹிந்தியில் மட்டுமே பெயர் பலகை வைக்கும்படி உத்தரவு ஏதும் பிறப்பித்திருந்தால், அதை உடனே திரும்பப் பெற வேண்டும். ரயில்வே அமைச்சரும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மீண்டும் தமிழில் பெயர் பலகை ஒளிர வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...