Monday, August 22, 2022

*எல்லா நாளும் மகிழ்ச்சியாக இருக்க....*

 *அடுத்தவர்களுக்கு எந்தசூழலிலும் உதவி செய்யத் தயங்காதீர்கள். அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடஉதவுங்கள்.இப்படி அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது, உங்களுக்கும் உதவிகள் தேடி வரும்.

சின்னதாகவோ, பெரிதாகவோ ஏதேனும் தொண்டுகள் செய்யுங்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படிப்பட்ட சேவைகளைச் செய்யும்போது, மனதுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது.
வேலையைத் தாண்டியும் வாழ்க்கையில் சாதிப்பதற்கு சில பழக்கங்களை வைத்துக்கொள்ளுங்கள். எழுதுவது. படிப்பது, இசை சுற்றுக்கொள்வதுவிளையாட்டு, பயணம், பிரார்த்தனை என்று ஏதாவது ஒன்று இருக்கட்டும். இது உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும்,
உங்களுக்குள் நேர்மறைச் சிந்தனையை வளர்க்கும் மனிதர்களின் அருகே இருங்கள். தன் பேச்சால் உங்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் நண்பர்களுடன் இணைந்திருங்கள்.உங்கள் நேரம் எதில் செல்வாகிறது என்பதில் கவனமாக இருங்கள், பணத்தைப் போலவே நேரமும் விலைமதிப்பற்றது. அர்த்தமற்ற விஷயங்களுக்காக அதை செலவு செய்யாதீர்கள். அதற்காக நண்பர்களுடன் செய்யும் பொழுதுபோக்குகளை நேர விரயமாக நினைக்காதீர்கள். அவை உங்கள் மனதை ரீசார்ஜ் செய்யும்.
மற்றவர்களிடம் பேசுவதற்கு நேர்மறையான வார்த்தைகளையே பயன்படுத்துங்கள். விமர்சனங்களையும் பாராட்டுகளையும் முகத்துக்கு நேராகச் செய்யுங்கள்.
குடும்பத்தினர், உறவுகள். நண்பர்கள், சக ஊழியர்கள் என்று எல்லோரும் செய்யும் செயல்களை உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் நல்ல விஷயங்களைச் செய்யும்போது மனம் திறந்து பாராட்டுங்கள்.
உங்களுக்கு அடுத்தவர்கள் செய்யும் தவறுகளையும் துரோகங்களையும் உடனுக்குடன் மன்னித்துவிடப் பழகுங்கள். அவற்றை மனதில் சுமந்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
ஒவ்வொரு இரவிலும் தூங்கப் போவதற்கு முன்பு, அன்றைய நாளை இனிதாக்கிய அத்தனை பேரையும் நினைவுகூர்ந்து நன்றி சொல்லுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...